தேசிய செய்திகள்

குடியரசு தலைவர் பங்கேற்கும் நிகழ்ச்சியில் வெடிகுண்டு வைக்கப்படும்; மிரட்டல் விடுத்த கோவில் பூசாரி கைது + "||" + Temple priest threatens to plant bomb at Prez function venue, held

குடியரசு தலைவர் பங்கேற்கும் நிகழ்ச்சியில் வெடிகுண்டு வைக்கப்படும்; மிரட்டல் விடுத்த கோவில் பூசாரி கைது

குடியரசு தலைவர் பங்கேற்கும் நிகழ்ச்சியில் வெடிகுண்டு வைக்கப்படும்; மிரட்டல் விடுத்த கோவில் பூசாரி கைது
கேரளாவில் குடியரசு தலைவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் வெடிகுண்டு வைக்கப்படும் என மிரட்டல் விடுத்த கோவில் பூசாரி கைது செய்யப்பட்டு உள்ளார்.

திருச்சூர்,

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் கேரளாவிற்கு 3 நாட்கள் சுற்று பயணம் மேற்கொண்டுள்ளார்.  இதற்காக அவர் திருவனந்தபுரத்திற்கு நேற்று வந்து சேர்ந்துள்ளார்.  கேரள சட்டசபையின் வைரவிழா கொண்டாட்டங்களின் முடிவாக இன்று சட்டசபை வளாகத்தில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றை அவர் தொடங்கி வைக்கிறார்.

தொடர்ந்து கொச்சி நகரில் கேரள உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி மற்றும் நீதிபதிகளுடன் நாளை காலை உணவு சாப்பிடுகிறார்.  அதன்பின்னர் புகழ் பெற்ற குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணா கோவிலுக்கு நாளை மறுநாள் செல்கிறார்.  அதனை முடித்து கொண்டு அவர் டெல்லிக்கு திரும்புகிறார்.

இந்த நிலையில், நேற்று நள்ளிரவு 1 மணியளவில் குடிபோதையில் இருந்த நபர் ஒருவர் காவல் துறை கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.  அவர், குடியரசு தலைவர் நாளை பங்கேற்கும் நிகழ்ச்சி நடைபெறும் புனித தாமஸ் கல்லூரியில் வெடிகுண்டு வைக்கப்படும் என மிரட்டல் விடுத்து உள்ளார்.

இதனை தொடர்ந்து அந்நபரின் மொபைல் எண்ணை வைத்து குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.  அந்த நபர் சிரகால் பகவதி கோவிலின் பூசாரியான ஜெயராமன் என்றும் அவர் தொலைபேசியில் பேசியபொழுது குடிபோதையில் இருந்துள்ளார் என்றும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.தொடர்புடைய செய்திகள்

1. வேட்டவலம் அருகே தகராறில் தாக்கப்பட்ட பூசாரி சிகிச்சை பலனின்றி சாவு
வேட்டவலம் அருகே தகராறில் தாக்கப்பட்ட பூசாரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
2. குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் 3 நாடுகளுக்கான சுற்று பயணத்தினை தொடங்கினார்
குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் சைப்ரஸ், பல்கேரியா மற்றும் செக் குடியரசு ஆகிய 3 நாடுகளுக்கான சுற்று பயணத்தினை இன்று தொடங்கினார்.