மாநில செய்திகள்

2 மாதங்கள் கழித்து உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படும் -மாநில தேர்தல் ஆணையம் + "||" + After 2 months local elections will be announced State Election Commission

2 மாதங்கள் கழித்து உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படும் -மாநில தேர்தல் ஆணையம்

2 மாதங்கள் கழித்து உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படும் -மாநில தேர்தல் ஆணையம்
2 மாதங்கள் கழித்து உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படும் என ஐகோர்ட்டில் மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.
சென்னை, 

உள்ளாட்சி தேர்தல் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர், ‘உள்ளாட்சி தேர்தலை 2017–ம் ஆண்டு நவம்பர் 17–ந் தேதிக்குள் நடத்தி முடிக்கவேண்டும்’ என்று கடந்த ஆண்டு செப்டம்பர் 4–ந் தேதி உத்தரவிட்டனர்.

ஆனால், இந்த உத்தரவை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் ஆணையர் மாலிக் பெரோஸ்கான், செயலாளர் ராஜசேகர் ஆகியோர் அமல்படுத்தவில்லை.

இதையடுத்து அவர்கள் மீது தி.மு.க. சார்பில் கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் கொண்ட முதல் அமர்வு கடந்த செவ்வாய்க்கிழமை (ஜூலை 31–ந் தேதி) தீர்ப்பு வழங்குவதாக இருந்தது. ஆனால், அன்று தீர்ப்பு வழங்கப்படவில்லை.

அதேநேரம், ‘தேர்தல் நடத்த வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டும், இதுவரை ஏன் தேர்தல் நடத்தவில்லை? என்பது உள்பட பல கேள்விகளை நீதிபதிகள் சரமாரியாக எழுப்பினார்கள்.

அதற்கு மாநில தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஆஜரான வக்கீல் நெடுஞ்செழியன், ‘இந்த வழக்கில், மூத்த வக்கீல் ஆஜராக உள்ளதால், விசாரணையை தள்ளிவைக்க வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்தார்.

இதையடுத்து விசாரணையை  இன்று தள்ளிவைத்த நீதிபதிகள், ‘உள்ளாட்சி தேர்தல் அட்டவணையை அன்று தாக்கல் செய்யவில்லை என்றால், மாநில தேர்தல் ஆணையர், செயலாளர் ஆகியோர் மீது கோர்ட்டு அவமதிப்பு சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று உத்தரவிட்டனர்.

இந்த நிலையில், இந்த கோர்ட்டு அவமதிப்பு வழக்கு நீதிபதிகள் முன்பு இன்று  மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது உள்ளாட்சி தேர்தல்  அட்டவணையை மாநில தேதல் ஆணையம் தாக்கல் செய்யவில்லை.

வார்டுகள் வரையறை செய்யப்பட்டு அரசுக்கு ஆகஸ்ட் 31-ல் அறிக்கை தாக்கல் செய்யப்படும், அதன் பின்னர் 2 மாதங்கள் கழித்து உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படும் என மாநில தேர்தல் ஆணையம் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் ரூ.89 கோடி பட்டுவாடா பட்டியல் வழக்கில் ஐகோர்ட் சரமாரி கேள்வி
ஆர்கே நகர் தேர்தலின்போது ரூ.89 கோடி பட்டுவாடா செய்வதற்காக வைத்திருந்த பட்டியல் பறிமுதல் வழக்கில் ஐகோர்ட் அடுக்குக்கடுக்கான கேள்விகளை எழுப்பி உள்ளது
2. ஜெயலலிதா சொத்துக்களை பராமரிக்க நிர்வாகிகளை நியமிக்க கோரிய வழக்கு: தீபா, தீபக் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
ஜெயலலிதா சொத்துக்களை பராமரிக்க நிர்வாகிகளை நியமிக்க கோரிய வழக்கில் தீபா, தீபக் ஆகியோர் 4 வாரத்தில் பதிலளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
3. கர்நாடக நீதிபதி சென்னை ஐகோர்ட்டுக்கு மாற்றம்
கர்நாடக நீதிபதி சென்னை ஐகோர்ட்டுக்கு மாற்றம் செய்யப்பட்டார்.
4. உள்ளாட்சி தேர்தல் அதிவிரைவில் நடப்பது தமிழகத்திற்கு நல்லது பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
உள்ளாட்சி தேர்தல் அதிவிரைவில் நடப்பது தமிழகத்துக்கு நல்லது என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
5. உள்ளாட்சி தேர்தல் நடத்துவது குறித்து மாநில தேர்தல் ஆணையத்துக்கு, ஐகோர்ட்டு கேள்வி
உள்ளாட்சி தேர்தல் நடத்த முடியவில்லை என்று ஐகோர்ட்டிலும், தேர்தலை நடத்த தயாராக இருப்பதாக சுப்ரீம் கோர்ட்டிலும், 2 விதமான முரண்பட்ட நிலைப்பாட்டை தேர்தல் ஆணையம் ஏன் எடுத்துள்ளது? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அதிகம் வாசிக்கப்பட்டவை