தேசிய செய்திகள்

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து சட்டத்திற்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு + "||" + Article 35 A: SC to hear matter on August 27, to check constitutional validity

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து சட்டத்திற்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து சட்டத்திற்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு சலுகைகள் அளிக்கும் சட்டப்பிரிவுக்கு எதிரான வழக்கு விசாரணையை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.
புதுடெல்லி

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு  சிறப்பு சலுகைகள் அளிக்கும் சட்டப்பிரிவு 35ஏ செல்லாது என அறிவிக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில்  பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

இந்த சட்டத்தின்படி காஷ்மீர் மக்கள் நிரந்தர குடிமக்கள் அந்தஸ்தை  பெறுவதுடன், வெளிமாநில மக்கள் யாரும் இங்கு அசையா சொத்துக்களை வாங்க முடியாது. மாநிலத்தின் நிரந்தர குடிமக்களை வரையறுத்து, அவர்களுக்கு சிறப்பு உரிமைகளை வழங்குவது தொடர்பாக மாநில சட்டமன்றம் எந்தவொரு சட்டத்தையும் இயற்றிக்கொள்ள இந்த 35ஏ சட்டப்பிரிவு அதிகாரம் அளிக்கிறது.

பிற மாநில மக்கள் இங்கு சொத்து வாங்க முடியாது என்று தடை விதிப்பது நாட்டின் ஒருமைப்பாட்டை பாதிப்பதாக பொதுநல மனுவில் கூறப்பட்டுள்ளது.
   
மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த வழக்கு இன்று ஐகோர்ட்  தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பு  விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றுவது தொடர்பாக விசாரணை நடத்தி முடிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. 

ஆனால், வழக்கை விசாரிக்கும் மூன்று நீதிபதிகளில் நீதிபதி சந்திரசூட் வராததால், விசாரணை ஆகஸ்ட் 27-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றுவது குறித்து மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வுதான் முடிவு செய்யும் என்றும், ஒரு நீதிபதி வராததால் வழக்கை ஒத்திவைப்பதாகவும் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா கூறினார். 


தொடர்புடைய செய்திகள்

1. பாகிஸ்தானிலிருந்து இந்தியாவிற்குள் நுழைய முயன்ற மூன்று பயங்கரவாதிகளை சுட்டு வீழ்த்தியது ராணுவம்
பாகிஸ்தானிலிருந்து இந்தியாவிற்குள் நுழைய முயன்ற மூன்று பயங்கரவாதிகளை ராணுவம் சுட்டு வீழ்த்தியது.
2. காஷ்மீரில் பிரிவினைவாதிகள் முழு அடைப்புக்கு அழைப்பு: மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்
காஷ்மீரில் பிரிவினைவாதிகள் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளனர் இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.
3. பாதுகாப்புப் படையினரின் தேடுதல் வேட்டையின்போது 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை;காவலர் வீரமரணம்
ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் படையினரின் தேடுதல் வேட்டையின்போது 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை, ஒரு காவலர் வீரமரணம் அடைந்துள்ளார்.
4. ஜம்மு காஷ்மீர் உள்ளாட்சி தேர்தல் ; பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இறுதி கட்ட வாக்குப்பதிவு
ஜம்மு காஷ்மீர் உள்ளாட்சி தேர்தலில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இறுதி கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
5. ஜம்மு காஷ்மீர்: சிஆர்பிஎப் முகாம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல், இரண்டு வீரர்கள் காயம்
ஜம்மு காஷ்மீரில் உள்ள சிஆர்பிஎப் முகாம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில், இரண்டு வீரர்கள் காயம் அடைந்தனர்.