மாநில செய்திகள்

கருணாநிதி உடல் நிலையில் இன்று காலை பின்னடைவு திருநாவுக்கரசர் தகவல் + "||" + Karunanidhi's physical condition Repeat this morning Thirunavukkarar information

கருணாநிதி உடல் நிலையில் இன்று காலை பின்னடைவு திருநாவுக்கரசர் தகவல்

கருணாநிதி உடல் நிலையில் இன்று காலை பின்னடைவு திருநாவுக்கரசர் தகவல்
கருணாநிதி உடல் நிலையில் இன்று காலை பின்னடைவு ஏற்பட்டது. தொடர்ந்து டாக்டர்கள் கண்காணிப்பில் உள்ளதாக திருநாவுக்கரசர் தகவல் #Karunanidhi
சென்னை,

வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை கோபாலபுரம் இல்லத்தில் தங்கி சிகிச்சை பெற்று வந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல்நிலை கடந்த 27-ந் தேதி நள்ளிரவில் திடீரென்று மோசமானது. இதைத்தொடர்ந்து  நள்ளிரவு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

கருணாநிதியின் உடல்நிலையை டாக்டர்கள் குழுவினர் 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர். அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இன்றுடன் 10 நாட்கள் ஆகின்றன.

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் காவேரி ஆஸ்பத்திரிக்கு வந்து கருணாநிதியை நேரில் பார்த்து உடல் நலம் விசாரித்து சென்றனர்.

மேலும் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன், முன்னாள் பிரதமர் தேவேகவுடா, கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், ஆந்திர முதல்- மந்திரி சந்திரபாபு நாயுடு உள்பட பல்வேறு தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் ஆஸ்பத்திரிக்கு வந்து உடல்நலம் விசாரித்து சென்றனர்.

அந்த வகையில் கருணாநிதியை நேரில் பார்த்து உடல் நலம் விசாரிப்பதற்காக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று சென்னை வந்தார்.
கருணாநிதி சிகிச்சை பெற்று வரும் அறைக்கு சென்று அவரை பார்த்தார். தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், கனிமொழி எம்.பி. மற்றும் டாக்டர்களிடம் கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரித்தார்.

இன்று 10 வது நாளாக கருணாநிதிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இன்று காலை காவேரி மருத்துவமனைக்கு  ஸ்டாலின், கனிமொழி, ராஜாத்தி அம்மாள், ஆ.ராசா, கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன் வருகை தந்தனர்.

மு.க. அழகிரி மருத்துவமனைக்குக்கு வருகை தந்துள்ளார்.திமுக தலைவர் கருணாநிதி அனுமதிக்கப்பட்டுள்ள காவேரி மருத்துவமனைக்கு தயாளு அம்மாள் வருகை தந்தார்.  தயாளு அம்மாளுடன் மு.க.தமிழரசு, துரை தயாநிதி, அருள்நிதி உள்ளிட்டோரும் காவேரி மருத்துவமனைக்கு வந்துள்ளனர்.  

திமுக தலைவர் கருணாநிதி சிகிச்சை பெற்றுவரும் காவேரி மருத்துவமனைக்கு திருநாவுக்கரசர் வருகை தந்தார். காவேரி மருத்துவமனையில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் பேட்டி அளித்தார். அப்போது 

அவரின் உடல்நிலை குறித்து மருத்துவர்கள், குடும்ப உறுப்பினர்களிடம் கேட்டறிந்தேன்  திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் காலை பின்னடைவு ஏற்பட்டு தற்போது கண்காணிப்பில் உள்ளார்.  கருணாநிதி பூரண உடல் நலம் பெற இறைவனை பிரார்த்திக்கிறேன் என கூறினார். 


தொடர்புடைய செய்திகள்

1. இன்று பிற்பகல் மு.க.ஸ்டாலின் வீடு திரும்புவார் - அப்போலோ மருத்துவமனை
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வலதுபக்க கால் தொடையில் சிறிய அளவில் அறுவை சிகிச்சை. இன்று பிற்பகல் மு.க.ஸ்டாலின் வீடு திரும்புவார்.
2. பேரணிக்கு எந்த நோக்கமும் இல்லை ; கருணாநிதி இறந்த 30-ம் நாளில் அஞ்சலி செலுத்தவே பேரணி-மு.க.அழகிரி
பேரணிக்கு எந்த நோக்கமும் இல்லை ; கருணாநிதி இறந்த 30-ம் நாளில் அஞ்சலி செலுத்தவே பேரணி என நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பின் பேட்டி அளித்த மு.க.அழகிரி கூறினார். #MKAlagiri
3. எதிர்பார்த்ததை விட அதிக தொண்டர்கள், மு.க. அழகிரி தலைமையிலான அமைதி பேரணி வெற்றி-துரை தயாநிதி
எதிர்பார்த்ததை விட அதிக தொண்டர்கள் மு.க. அழகிரி தலைமையிலான அமைதி பேரணி வெற்றியடைந்து உள்ளது என அழகிரி மகன் துரை தயாநிதி கூறி உள்ளார். #MKAlagiri
4. புகழஞ்சலி கூட்டம்: கருணாநிதியை தவிர்த்துவிட்டு, திராவிட வரலாற்றை யாரும் எழுத முடியாது-துரைமுருகன்
கருணாநிதி புகழஞ்சலி கூட்டத்தில் கருணாநிதியை தவிர்த்துவிட்டு, திராவிட வரலாற்றை யாரும் எழுத முடியாது என தி.மு.க பொருளாளர் துரைமுருகன் பேசினார்.
5. திமுக தலைவர் கருணாநிதி தனிமனிதர் அல்ல திராவிட இயக்கத்தின் மூன்றாவது அத்தியாயம்-கீ.விரமணி
திமுக தலைவர் கருணாநிதி தனிமனிதர் அல்ல திராவிட இயக்கத்தின் மூன்றாவது அத்தியாயம் என கீ.விரமணி கூறி உள்ளார்.