மாநில செய்திகள்

திமுக தலைவர் கருணாநிதி நலமாக உள்ளார்- மு.க அழகிரி + "||" + DMK chief M Karunanidhi's fine MK Alagiri

திமுக தலைவர் கருணாநிதி நலமாக உள்ளார்- மு.க அழகிரி

திமுக தலைவர் கருணாநிதி நலமாக உள்ளார்- மு.க அழகிரி
திமுக தலைவர் கருணாநிதி நலமாக உள்ளார் என கோபாலபுரம் சென்ற மு.க அழகிரி கூறினார். #Karunanidhi
சென்னை,

வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை கோபாலபுரம் இல்லத்தில் தங்கி சிகிச்சை பெற்று வந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல்நிலை கடந்த 27-ந் தேதி நள்ளிரவில் திடீரென்று மோசமானது. இதைத்தொடர்ந்து  நள்ளிரவு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

கருணாநிதியின் உடல்நிலையை டாக்டர்கள் குழுவினர் 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர். அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இன்றுடன் 10 நாட்கள் ஆகின்றன.

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் காவேரி ஆஸ்பத்திரிக்கு வந்து கருணாநிதியை நேரில் பார்த்து உடல் நலம் விசாரித்து சென்றனர்.

மேலும் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன், முன்னாள் பிரதமர் தேவேகவுடா, கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், ஆந்திர முதல்- மந்திரி சந்திரபாபு நாயுடு உள்பட பல்வேறு தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் ஆஸ்பத்திரிக்கு வந்து உடல்நலம் விசாரித்து சென்றனர்.

அந்த வகையில் கருணாநிதியை நேரில் பார்த்து உடல் நலம் விசாரிப்பதற்காக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று சென்னை வந்தார்.
கருணாநிதி சிகிச்சை பெற்று வரும் அறைக்கு சென்று அவரை பார்த்தார். தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், கனிமொழி எம்.பி. மற்றும் டாக்டர்களிடம் கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரித்தார்.

இன்று 10-வது நாளாக கருணாநிதிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இன்று காலை காவேரி மருத்துவமனைக்கு  ஸ்டாலின், கனிமொழி, ராஜாத்தி அம்மாள், ஆ.ராசா, கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன் வருகை தந்தனர்.

மு.க. அழகிரி மருத்துவமனைக்குக்கு வருகை தந்துள்ளார்.திமுக தலைவர் கருணாநிதி அனுமதிக்கப்பட்டுள்ள காவேரி மருத்துவமனைக்கு தயாளு அம்மாள் வருகை தந்தார்.  தயாளு அம்மாளுடன் மு.க.தமிழரசு, துரை தயாநிதி, அருள்நிதி உள்ளிட்டோரும் காவேரி மருத்துவமனைக்கு வந்துள்ளனர்  

திமுக தலைவர் கருணாநிதி சிகிச்சை பெற்றுவரும் காவேரி மருத்துவமனைக்கு திருநாவுக்கரசர் வருகை தந்தார். காவேரி மருத்துவமனையில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் பேட்டி அளித்தார். அப்போது 

அவரின் உடல்நிலை குறித்து மருத்துவர்கள், குடும்ப உறுப்பினர்களிடம் கேட்டறிந்தேன்  திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் காலை பின்னடைவு ஏற்பட்டு தற்போது கண்காணிப்பில் உள்ளார் என கூறினார். 

இந்த நிலையில்  காவேரி மருத்துவமனையில் இருந்து கோபாலபுரம் புறப்பட்ட மு.க.அழகிரியிடம்  நிருபர்கள் கேட்டபோது திமுக தலைவர் கருணாநிதி நலமாக உள்ளார் என கூறினார்.