தேசிய செய்திகள்

பீகாரில் 110 காப்பகங்களில் சிறுமிகள் துஷ்பிரயோகம் -டாடா இன்ஸ்டிடியூட் ஆப் சோஷியல் சயின்ஸ் + "||" + Abuse at Bihar shelter homes: What all TISS report says

பீகாரில் 110 காப்பகங்களில் சிறுமிகள் துஷ்பிரயோகம் -டாடா இன்ஸ்டிடியூட் ஆப் சோஷியல் சயின்ஸ்

பீகாரில் 110 காப்பகங்களில் சிறுமிகள் துஷ்பிரயோகம் -டாடா இன்ஸ்டிடியூட் ஆப் சோஷியல் சயின்ஸ்
பீகாரில் 110 காப்பகங்களில் சிறுமிகள் துஷ்பிரயோகம் நடப்பதாக டாடா இன்ஸ்டிடியூட் ஆப் சோஷியல் சயின்ஸ் தணிக்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பட்னா, 

பீகாரின் முசாபர்பூரில், மாநில அரசின் நிதியுதவி பெறும் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் காப்பகம் நடத்தப்பட்டு வந்தது. இதில் தங்கியிருந்த சுமார் 34 சிறுமிகளுக்கு மயக்க மருந்து கொடுத்து காப்பக நிர்வாகிகள் மற்றும் பலர் பலாத்காரம் செய்த சம்பவம் சமீபத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவர்கள் 7 முதல் 17 வயது வரை உள்ள சிறுமிகள்.  இதில் 30 பேர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உள்ளதாக மருத்தவ பரிசோதனை உறுதிபடுத்தி உள்ளது.  மும்பையை சார்ந்த டாடா இன்ஸ்டிடியூட் ஆப் சோஷியல் சயின்ஸ் (TISS),நடத்திய ஆய்வில் இந்த சம்பவம் வெளிசத்துக்கு வந்தது.

இது தொடர்பாக தீவிர விசாரணை நடந்து வருகிறது. வழக்கு விசாரணை சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து மொத்தம் 44 சிறுமிகள் மீடகப்பட்டனர்.  இந்த சம்பவம் தொடர்பாக 11 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

விசாரணையின்போது சிறுமிகளுக்கு நேரிட்ட கொடூரங்கள் தொடர்பான தகவல்களும் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் குழந்தைகள் பாதுகாப்பு பிரிவை சேர்ந்த 14 அதிகாரிகளை பீகார் அரசு சஸ்பெண்ட் செய்துள்ளது. 

தற்போது பாதுகாப்பு  குறைபாடு காரணமாக ஒரு சிறுமி திடீர் என மாயமாகி உள்ளார். மீட்கப்பட்டு 14 சிறுமிகளில்  ஒருவர்,  மதுபாணியில் ஒரு அரசு சாரா நிறுவனத்திற்கு மாற்றப்பட்டது தற்போது  கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த வழக்கின் முக்கிய  குற்றவாளியான பிரஜேஷ் தாகூர்  கைது செய்யப்பட்டு  மாவட்ட சிறைச்சாலை மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

மேல்லூர் போலீசார் தெரிவித்துள்ள தகவல்படி தாகூர்  குறைந்த இரத்த அழுத்தம், சர்க்கரை ஆகிய நோய்கள் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முசாபர்பூர் சிறை கண்காணிப்பாளர் ராஜீவ் குமார் ஷா  கூறியதாவது;-

"அவரை சிறைச்சாலை மருத்துவமனையில் வைக்கும்படி டாக்டர்கள் கூறுவதால் நாங்கள் என்ன செய்ய  முடியும்? அவர் எந்தக் குற்றத்தையும் செய்திருக்கலாம், ஆனால் அவருக்கு சரியான சிகிச்சையை வழங்க முடியாது என கூற முடியாது.  அது அவருடைய உரிமை. அவர் இறந்துவிட்டால் - சில சதிகளின் ஒரு பகுதியாக அவர் இறந்துவிட்டார் என்று நீங்கள் சொல்வீர்கள் " என கூறினார்.

டாடா இன்ஸ்டிடியூட் ஆப் சோஷியல் சயின்ஸ் (TISS)  தணிக்கையில்  கிட்டத்தட்ட 110 அரசு நிதியுதவி பெறும் காப்பகங்களில்  சிறுவர் நீதி சட்டத்தை மீறும் வகையில் வன்முறை சம்பவஙக்ள் நடைபெறுவதாக கூறி உள்ளது. மேலும் இந்த அமைப்புகளில் தீவிரத்தன்மையின் அளவு வேறுபடுகின்றன.

முசாப்பர் பூர்  காப்பகத்தில் தங்கியியிருக்கும் பெண்கள் திறந்த வெளி இடங்களில் அனுமதிக்கப்படுவது இல்லை, தங்கள் அறைகளில்  பூட்டி வைக்கப்பட்டனர். அவர்கள் தங்கள் உணவுகளை எடுத்துச் செல்ல மட்டுமே அனுமதிக்கப்பட்டார்கள், அதுவும் சாப்பாட்டு அறைக்கு மட்டும்தான். கைத்தொழில் பயிற்சி மற்றும் பொழுதுபோக்கு வசதிகள் எதுவும் இல்லை.

பெண்களுக்கு  ஆடைகள், மருந்துகள் மற்றும் கழிப்பறைகளை கூட வழங்கவில்லை என்று TISS குழுவினர்  கூறி உள்ளனர்.