சினிமா செய்திகள்

தலைவர் பதவியை ராஜினாமா செய்யப்போவதாக மோகன்லால் மிரட்டல் இல்லை -நடிகர் சங்கம் மறுப்பு + "||" + Mohanlal won't resign as president', AMMA responds to Mathrubhumi report

தலைவர் பதவியை ராஜினாமா செய்யப்போவதாக மோகன்லால் மிரட்டல் இல்லை -நடிகர் சங்கம் மறுப்பு

தலைவர் பதவியை ராஜினாமா செய்யப்போவதாக மோகன்லால் மிரட்டல் இல்லை -நடிகர் சங்கம் மறுப்பு
நடிகர் சங்க தலைவர் பதவியை ராஜினாமா செய்யப்போவதாக மோகன்லால் மிரட்டல் விடுத்ததாக கூறப்பட்ட தகவலை நடிகர் சங்கம் (அம்மா) மறுத்து உள்ளது.
திருவனந்தபுரம் 

கேரளாவில் பிரபல நடிகையை காரில் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் முன்னணி நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் நடந்ததும் மலையாள நடிகர் சங்கத்தில் இருந்து திலீப் நீக்கப்பட்டார். சமீபத்தில்  மலையாள நடிகர் சங்கமான அம்மாவின் தலைவராக நடிகர் மோகன்லால் தேர்ந்து எடுக்கப்பட்டார்.

அவர் பொறுப்பேற்றதும் திலீப்பை மீண்டும் நடிகர் சங்கத்தில் சேர்க்க முடிவு செய்யப்பட்டது. இதற்கு நடிகைகள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். சில நடிகைகள் நடிகர் சங்க பொறுப்பில் இருந்தும் விலகினர்.

இதற்கிடையே பாதிக்கப்பட்ட நடிகை, தனது புகார் குறித்த வழக்கை விசாரிக்க பெண் நீதிபதி தலைமையில் தனிக்கோர்ட்டு அமைக்க வேண்டும் என்று ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அதற்கு ஐகோர்ட்டு கண்டனம் தெரிவித்து கேள்விகள் எழுப்பியது.

நடிகை பலாத்கார வழக்கில் தனிகோர்ட்டு அமைக்க அரசு முன்வர வேண்டும் என்று மலையாள நடிகர் சங்கம் சில நாட்களுக்கு முன்பு முடிவு செய்தது. இது தொடர்பாக கோரிக்கை மனு தயாரிக்கப்பட்டு முதல்-மந்திரி பார்வைக்கு அனுப்பவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்த தகவல் திலீப்பிற்கு தெரிய வந்ததாகவும், அவர் இடையில் தலையிட்டு இந்த மனு முதல்-மந்திரி அலுவலகத்திற்கு செல்லாமல் தடுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த விவகாரம் மோகன்லாலுக்கு தெரியவந்ததால் தான் அவர் எரிச்சல் அடைந்ததாகவும்  மலையால பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டு உள்ளது.

இந்நிலையில் மோகன்லால் நடிகர் சங்க நிர்வாகிகள் இடைவேளை பாபு உள்பட சிலரை அழைத்து ஆலோசனை நடத்தினார். அப்போது நடிகர் திலீப், நடிகை விவகாரத்தில் குற்றம் செய்யவில்லை என்றால், ஏன் பயப்பட வேண்டும்? எல்லா வி‌ஷயத்திலும் தேவையில்லாமல் ஏன் மூக்கை நுழைக்கிறார்? இதனால் நடிகர்களுக்கு சமூகத்தில் கெட்டப்பெயர் ஏற்படுகிறது.

இதே நிலை நீடித்தால் நான் நடிகர் சங்க தலைவர் பதவியில் இருந்து விலகி விடுவேன். ராஜினாமா செய்யவும் தயங்க மாட்டேன் என்று கூறியதாகவும் அந்த  பத்திரிகை செய்தி வெளியிட்டு இருந்தது. ஆனால் இதனை மலையாள நடிகர்கள் சங்கமான அம்மா மறுத்து உள்ளது. 

அந்த பத்திரிகை வெளியிட்டு உள்ள செய்தியை  அம்மா  மறுத்து உள்ளது.  அம்மா உறுப்பினர்கள் கவலைப்பட வேண்டாம் என்றும், அம்மாவில்  பிரச்சைனை இல்லை. தலைவர் உள்பட யாரும் ராஜினாமா இல்லை என்றும் அதில் கூறி உள்ளது. மேலும் இத்தகைய தகவல் வெளியிட்ட பத்திரிகைக்கு  ஒரு ஆண்டு விளம்பரத்தை நிறுத்திவைப்பது எனவும் கூறி உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. சூர்யா படத்தில் பிரதமராக மோகன்லால்
செல்வராகவன் இயக்கிய ‘என்.ஜி.கே’ படத்தில் சூர்யா நடித்து முடித்துள்ளார். இப்போது கே.வி.ஆனந்த் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இவர்கள் கூட்டணியில் ஏற்கனவே அயன், மாற்றான் படங்கள் வெளிவந்தன.
2. டிரைலரை வெளியிடும் மம்முட்டி
சுதந்திர தினத்தை முன்னிட்டு, ‘ஒடியன்’ படத்தின் டிரைலரை வெளியிட இருக்கிறார்கள்.
3. பாலியல் வழக்கில் சிக்கிய திலீப்பை நடிகர் சங்கத்தில் சேர்த்தது ஏன்? மோகன்லால் விளக்கம்
நடிகை கடத்தல் வழக்கில் சிக்கி கைதானதால் மலையாள நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கி வைக்கப்பட்ட திலீப்பை புதிய தலைவர் பொறுப்பை ஏற்றுள்ள மோகன்லால் மீண்டும் சங்கத்தில் சேர்த்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
4. நிரபராதி என நிரூபிக்கும் வரை சங்கத்தில் உறுப்பினராக மாட்டேன்- நடிகர் திலீப்
தான் நிரபராதி என நிரூபிக்கும் வரை எந்த சங்கத்திலும் உறுப்பினராக மாட்டேன் என மலையாள நடிகர் திலீப் கூறி உள்ளார்.
5. நடிகர்கள் சங்கத்தில் திலீப்பை சேர்த்ததற்கு எதிர்ப்பு ; மோகன்லால் உருவ பொம்மை எரிப்பு
நடிகர்கள் சங்கத்தில் திலீப் சேர்க்கபட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து இந்திய இளைஞர் கூட்டமைப்பு மோகன்லால் உருவ பொம்மையை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். #Mohanlal #Dileep