சினிமா செய்திகள்

திருநாவுக்கரசர் கூறுவது செய்தி மட்டும்தான்; நான் கூறினால் தான் சிக்னல் -கமல்ஹாசன் + "||" + The message of the Tirunavukkaras is only the news; If I say the signal Kamal

திருநாவுக்கரசர் கூறுவது செய்தி மட்டும்தான்; நான் கூறினால் தான் சிக்னல் -கமல்ஹாசன்

திருநாவுக்கரசர் கூறுவது செய்தி மட்டும்தான்; நான் கூறினால் தான் சிக்னல் -கமல்ஹாசன்
என்னிடம் இருந்து கூட்டணிக்கு சிக்னல் வந்ததாக திருநாவுக்கரசர் கூறுவது செய்தி மட்டும்தான், நான் கூறினால் தான் சிக்னல் என கமல்ஹாசன் கூறி உள்ளார்.
சென்னை:

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கும்போது :-

தி.மு.க. காங்கிரஸ் கூட்டணி வலுவாக உள்ளது. வருகின்ற பாராளுமன்ற  தேர்தலில் ராகுல்காந்தி தான் பிரதமர் வேட்பாளர். நடிகர் கமல்ஹாசன் ராகுல் காந்தியை சந்தித்தது, அவர் வெளியிட்டு வரும் கருத்துக்கள் மூலம் காங்கிரஸ் அணியில் அவர் இணைவதற்கான சிக்னல் தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்த் அ.தி.மு.க. பக்கம் செல்வாரா? என்று என்னால் ஆரூடம் சொல்ல முடியாது. பிரிந்து கிடக்கும் அ.தி.மு.க. அணிகள் இணைவதற்கான வாய்ப்பும் இல்லை. ரஜினி பா.ஜனதா பக்கம் சென்றால் தலித், சிறுபான்மையினர் உள்ளிட்ட 36 சதவீத வாக்குகளை இழப்பார் என கூறினார்.

இதற்கு சென்னை விமான நிலையத்தில் பதில் அளித்துள்ள கமல்ஹாசன் என்னிடம் இருந்து கூட்டணிக்கு சிக்னல் வந்ததாக திருநாவுக்கரசர் கூறுவது செய்தி மட்டும்தான், நான் கூறினால் தான் சிக்னல் என கூறி உள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. 5 மாநில தேர்தல் முடிவு: கமல்ஹாசன் கருத்து ‘புதிய ஆரம்பத்தின் முதல் அடையாளம்’
5 மாநில தேர்தல் முடிவுகள் குறித்து, 'புதிய ஆரம்பத்தின் முதல் அடையாளம். மக்கள் தீர்ப்பு இது' என்று கருத்து தெரிவித்துள்ளார்.
2. தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக யார் வேண்டுமானாலும் வரலாம், ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் வரமாட்டார்- திருநாவுக்கரசர்
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக ஈ.வி.கே.எஸ் இளங்கோவனால் ஒரு போதும் வர முடியாது என்று திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.
3. கஜா புயலால் சேதம் அடைந்த பகுதிகளை பேரிடர் பாதித்த மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும் கமல்ஹாசன் பேட்டி
கஜா புயலால் சேதம் அடைந்த பகுதிகளை பேரிடர் பாதித்த மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறினார்.
4. புயல் நிவாரணம் வழங்குவதில் மத்திய அரசு தமிழகத்திற்கு பாராமுகம் காட்டுகிறது கமல்ஹாசன் பேட்டி
புயல் நிவாரணம் வழங்குவதில் மத்திய அரசு தமிழகத்திற்கு பாராமுகம் காட்டுகிறது என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறினார்.
5. ஸ்டெர்லைட் விவகாரம் : அகர்வால் குழுவின் அறிக்கையை பார்த்து அழுவதா, சிரிப்பதா என தெரியவில்லை - கமல்ஹாசன்
ஸ்டெர்லைட் விவகாரத்தில் அகர்வால் குழுவின் அறிக்கையை பார்த்து அழுவதா, சிரிப்பதா என தெரியவில்லை என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.