தேசிய செய்திகள்

நாட்டிலேயே முதல் முறையாக பசு பாதுகாவலர்களுக்கு அடையாள அட்டை: உத்தரகாண்ட் அரசு முடிவு + "||" + Uttarakhand will soon issue identity cards to ‘gau rakshaks’

நாட்டிலேயே முதல் முறையாக பசு பாதுகாவலர்களுக்கு அடையாள அட்டை: உத்தரகாண்ட் அரசு முடிவு

நாட்டிலேயே முதல் முறையாக பசு பாதுகாவலர்களுக்கு அடையாள அட்டை: உத்தரகாண்ட் அரசு முடிவு
நாட்டிலேயே முதல் முறையாக பசு பாதுகாவலர்களுக்கு அடையாள அட்டை வழங்க உத்தரகாண்ட் அரசு முடிவு செய்துள்ளது.
டேராடூன்,

உத்தரபிரதேசம், அரியானா உள்ளிட்ட வட மாநிலங்களில், பசு பாதுகாப்பு என்ற பெயரில் கும்பலாகச் சேர்ந்து தாக்குவது, கொலை செய்வது போன்ற வன்முறைச் சம்பவங்கள் அதிக அளவில் நடைபெற்றன. குறிப்பாக, பசு வதையை தடுப்பதாகக் கூறிக்கொண்டு, கால்நடை வளர்ப்போர் மற்றும் வியாபாரிகள் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த வன்முறைச் சம்பவங்களுக்கு சிலர் பலியாகினர். இந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இந்தநிலையில்,  இதை தடுக்க உத்தராகண்டில் உண்மையான பசு பாது காவலர்களுக்கு அடையாள அட்டை வழங்க அம்மாநில அரசு திட்டமிட் டுள்ளது.

இது குறித்து பசு சேவா கமிஷனின் தலைவர் என்.எஸ். ராவத் கூறியதாவது:

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள அனைத்து பசு பதுகாவலர்களையும் தனியாக அடையாளப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் இந்த முறை அறிவிக்கப்பட உள்ளது. அதன்படி பசு பாதுகாவலர் அனைவருக்கும் விரைவில் அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது.

மேலும் மாநிலத்தில் உள்ள 13 மாவட்டங்களில் உள்ள அனைத்துப்பசு பாதுகாவலர்களுக்கும் விரைவில் அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது. இதில் முதல் கட்டமாக 6 மாவட்டங்களில் கணக்கெடுப்பு முடிந்துள்ளாக அவர் தெரிவித்துள்ளார்.