தேசிய செய்திகள்

பெப்சி நிறுவன சிஇஓ பொறுப்பில் இருந்து விலகுகிறார் இந்திரா நூயி + "||" + PepsiCo's Indra Nooyi to step down after 12 years as CEO, President Ramon Laguarta to succeed her

பெப்சி நிறுவன சிஇஓ பொறுப்பில் இருந்து விலகுகிறார் இந்திரா நூயி

பெப்சி நிறுவன சிஇஓ பொறுப்பில் இருந்து விலகுகிறார் இந்திரா நூயி
பெப்சி நிறுவன சிஇஓ பொறுப்பில் இருந்து இந்திரா நூயி அக்டோபர் மாதம் விலகுகிறார் என்று அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாஷிங்டன்,

உலக அளவில் குளிர்பான விற்பனையில் முன்னணி வகிக்கும் நிறுவனமான பெப்சியின் தலைமை செயல் அதிகாரியாக இந்திரா நூயி செயல்பட்டு வருகிறார். கடந்த 12 ஆண்டுகளாக இப்பொறுப்பில் இருக்கும் இந்திராநூயி அப்பொறுப்பில் இருந்து விலக உள்ளதாக பெப்சி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வரும் அக்டோபர் மாதத்தில், இந்திரா நூயி, சிஇஒ பொறுப்பில் இருந்து விலகுவார் எனவும், பெப்சிகோ நிறுவனத்தின் பிரசிடண்ட் ராமோன் லகுவார்டா, சிஇஒ பொறுப்பை ஏற்றுக்கொள்வார் என்றும் அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 ஆண்டுகளாக பெப்சி நிறுவனத்தில் பணியாற்றி வரும் இந்திரா நூயி, சென்னையில் பிறந்தவர் ஆவார். இந்திராநூயி சென்னை கிறிஸ்தவ கல்லூரியில் தனது பட்டப்படிப்பை முடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், கடந்த 2014-ம் ஆண்டு போர்ப்ஸ் இதழ் வெளியிட்ட உலகின் சக்தி வாய்ந்த பெண்மணிகள் பட்டியலில் இந்திரா நூயி 13-வது இடத்திலும், 2015-ம் ஆண்டு பார்டியூன் இதழ் வெளியிட்ட பட்டியலில் 2-வது இடத்திலும் இருந்தார் என்பது நினைவு கூரத்தக்கது.


தொடர்புடைய செய்திகள்

1. பேஸ்புக் நிறுவனர் மார்க் சூகர்பெர்க் சேர்மன் பொறுப்பில் இருந்து நீக்கப்படுகிறாரா?
பேஸ்புக் நிறுவனர் மார்க் சூகர்பெர்க் சேர்மன் பொறுப்பில் இருந்து நீக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2. போட்டியில் வெற்றி பெற்றவருக்கு ரூ.50 லட்சம் வழங்க பெப்சி நிறுவனத்திற்கு நுகர்வோர் ஆணையம் உத்தரவு
பெப்சி இந்தியா நிறுவனம் நடத்திய போட்டியில் வெற்றி பெற்றவருக்கு ரூ.50 லட்சம் வழங்க டெல்லி நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.
3. பயனாளர்களின் தனிப்பட்ட தகவல் திருடப்பட்டதாக சர்ச்சை எழுந்த நிலையில் கூகுள் பிளஸ் நிறுத்தப்படுகிறது !
பயனாளர்களின் தனிப்பட்ட திருடப்பட்டதாக தகவல் வெளியான நிலையில் கூகுள் பிளஸ் நிறுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
4. நடப்பு ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.3 சதவீதமாக இருக்கும்: ஐ.எம்.எப் அறிக்கை
நடப்பு ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.3 சதவீதமாக இருக்கும் என்று ஐ.எம்.எப் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
5. உலகைச்சுற்றி...
அமெரிக்காவில் வாஷிங்டன் வீதிகள் வழியாக ராணுவ அணிவகுப்பு நடத்த ஜனாதிபதி டிரம்ப் உத்தரவிட்டு இருந்தார்.