தேசிய செய்திகள்

காப்பக சிறுமிகளுக்கு பாலியல் கொடுமை: காப்பகங்களுக்கு சென்று ஆய்வு நடத்த எம்.பிகளுக்கு மேனகா காந்தி உத்தரவு + "||" + I propose that MPs go to institutions in their constituencies & give me reports Union Minister Maneka Gandhi

காப்பக சிறுமிகளுக்கு பாலியல் கொடுமை: காப்பகங்களுக்கு சென்று ஆய்வு நடத்த எம்.பிகளுக்கு மேனகா காந்தி உத்தரவு

காப்பக சிறுமிகளுக்கு பாலியல் கொடுமை:  காப்பகங்களுக்கு சென்று ஆய்வு நடத்த எம்.பிகளுக்கு மேனகா காந்தி உத்தரவு
காப்பக சிறுமிகளுக்கு பாலியல் கொடுமை சம்பவம் எதிரொலியாக காப்பகங்களுக்கு சென்று ஆய்வு நடத்த எம்.பிகளுக்கு மேனகா காந்தி உத்தரவிட்டுள்ளார். #ManekaGandhi
புதுடெல்லி, 

பீகாரை தொடர்ந்து உத்தரப் பிரதேசத்திலும், காப்பகத்தில் தங்கியிருந்த சிறுமிகள் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான சம்பவம் நடந்துள்ளது. அந்தக் காப்பகத்தில் இருந்து 24 சிறுமிகள் மீட்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் இது குறித்து மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை மந்திரி மேனகா காந்தி கூறியதாவது:

அனைத்து எம்,பிக்களும் தங்களது தொகுதிகளில் உள்ள காப்பகங்களுக்கு சென்று ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டும். சிறிய அளவிளான குழந்தைகள் மற்றும் பெண்கள் காப்பகங்களை பெரிய காப்பகங்களாக மாற்றி இனி பெண்கள் மட்டுமே பணி புரிய பணியமர்த்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும் 1000 பெண்கள் அல்லது 1000 சிறுமிகளுடன் பெரிய காப்பகங்கள் அமைக்க உடனடியாக நிதி வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.