தேசிய செய்திகள்

லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதி டெல்லி விமான நிலையத்தில் கைது + "||" + Saudi-Based LeT Terrorist Handler Arrested At Delhi Airport

லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதி டெல்லி விமான நிலையத்தில் கைது

லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதி டெல்லி விமான நிலையத்தில் கைது
லஷ்கர் இ தொய்பா இயக்கத்தின் பயங்கரவாதி டெல்லி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
புதுடெல்லி,

பாகிஸ்தானை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் லஷ்கர்-இ-தய்பா அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதி டெல்லி இந்திரா காந்தி விமானநிலையத்தில் இன்று கைது செய்யப்பட்டிருப்பதாக தேசிய புலனாய்வு அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது. ஹபிபுர் ரஹமான் எனப்படும் ஹபிப் எனப்படும் நபர்தான் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் ஒடிசா மாநிலம் கெண்டாரபாரா பகுதியில் வசித்து வந்தவர். ஆனால், சமீப காலமாக அவர் சவூதி அரேபியாவில் இருக்கும் ரியாத்தில் வசித்து வந்தார் எனக் கூறப்படுகிறது. லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின்  பயங்கரவாதி ஷேக் அப்துல் நயீம் என்பவருக்கு அடுத்த நிலையில் ஹபிப் இருந்துள்ளார் எனப்படுகிறது. 

நயீம், கடந்த 2007 ஆம் ஆண்டு, வங்க தேசத்திலிருந்து 3 பயங்கரவாதிகளை இந்தியாவுக்குள் கொண்டு வர முயன்றபோது கைது செய்யப்பட்டார். ஆனால், கடந்த 2014 ஆம் ஆண்டு நயீம், போலீஸ் பிடியிலிருந்து தப்பினார். அவர் பாகிஸ்தான் மற்றும் சவூதியில் உள்ள பயங்கரவாத அமைப்புகளின் வழிகாட்டுதல்படி, இந்தியாவில் பயங்கரவாத நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளார். 

இந்தியாவில் தாக்குதல் நடத்த ஏற்ற இடங்களை கண்டுபிடிக்க நயீம் நியமிக்கப்பட்டு இருந்ததாகவும். அதற்காக அவர் பல்வேறு அடையாளங்களுடன் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உளவு பார்த்துள்ளார். ஜம்மூ-காஷ்மீர், இமாச்சல பிரதேசம், சண்டிகர் உள்ளிட்ட மாநிங்களுக்கு நயீம் சென்றுள்ளார் என்று கூறப்படுகிறது.

நயீமின் இந்தப் பயணங்களுக்கு ஹபிப் தங்கும் இடங்களையும் நிதித் தேவையையும் பூர்த்தி செய்து கொடுத்திருக்கிறார். நயீமும் ஹபிப்பும் பாகிஸ்தானிலிருந்து செயல்பட்டு வரும் லஷ்கர் தீவிரவாதியான ரெஹன் எனப்படும் அம்ஜத் வழிகாட்டுதல்படி நடந்து வந்துள்ளனர் என்று தேசிய புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது. நயீமை கடந்த 2017 ஆம் ஆண்டு தேசிய புலனாய்வு முகமை மீண்டும் கைது செய்தது.