மாநில செய்திகள்

சென்னை காவேரி மருத்துவமனைக்கு கருணாநிதி குடும்பத்தினர் வருகை + "||" + Karunanidhi's family visits Chennai Cauvery hospital

சென்னை காவேரி மருத்துவமனைக்கு கருணாநிதி குடும்பத்தினர் வருகை

சென்னை காவேரி மருத்துவமனைக்கு கருணாநிதி குடும்பத்தினர் வருகை
சென்னை காவேரி மருத்துவமனைக்கு கருணாநிதி குடும்பத்தினர் வருகை தந்துள்ளனர். #KauveryHospital
சென்னை,

கருணாநிதி உடல் நிலை குறித்து  காவேரி மருத்துவமனை 6-வது முறையாக அறிக்கை வெளிட்டது. அதில் 

* திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

* 24 மணி நேரமும் மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

* வயது முதிர்வு காரணமாக உடல்நிலையில் ஏற்பட்டுள்ள பின்னடைவு, உறுப்புகள் சீராக செயல்பட தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. என அதில் கூறப்பட்டுள்ளது.

இந்தநிலையில் காவேரி மருத்துவமனைக்கு  மு.க.ஸ்டாலின், மு.க. அழகிரி, மு.க.தமிழரசு உள்ளிட்ட கருணாநிதி குடும்பத்தினர்,  2 மகள்கள் மூத்த மகள் செல்வி, கனிமொழி எம்.பி. பேராசிரியர் க. அன்பழகன், துரைமுருகன், கி.வீரமணி உள்ளிட்ட தலைவர்களும் சென்னை காவேரி மருத்துவமனைக்கு கருணாநிதி குடும்பத்தினர் வருகை தந்துள்ளனர். பேராசிரியர் க. அன்பழகன் மருத்துவமனைக்கு சென்று சிறிது நேரம் கழித்து புறப்பட்டு சென்றார். கருணாநிதி முதல்-அமைச்சராக இருந்த போது பாதுகாப்பு அதிகாரியாக இருந்த டிஎஸ்பி பாண்டியன் வருகை தந்துள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு என்ற காவேரி மருத்துவமனையின் அறிக்கை வெளியானதையடுத்து மருத்துவமனைக்கு தொண்டர்களின் வருகை அதிகரித்துள்ளது.