மாநில செய்திகள்

டெல்லியில் இருந்து திமுக எம்.பிக்கள், திருச்சி சிவா, டிகேஎஸ் இளங்கோவன் விமானம் மூலம் சென்னை புறப்பட்டனர் + "||" + DMK MPs rushed to chennai

டெல்லியில் இருந்து திமுக எம்.பிக்கள், திருச்சி சிவா, டிகேஎஸ் இளங்கோவன் விமானம் மூலம் சென்னை புறப்பட்டனர்

டெல்லியில் இருந்து திமுக எம்.பிக்கள், திருச்சி சிவா, டிகேஎஸ் இளங்கோவன் விமானம் மூலம் சென்னை புறப்பட்டனர்
டெல்லியில் இருந்து திமுக எம்.பிக்கள், திருச்சி சிவா, டிகேஎஸ் இளங்கோவன் விமானம் மூலம் சென்னை புறப்பட்டனர். #CauveryHospital #KarunanidhiHealth
புதுடெல்லி,

வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை கோபாலபுரம் இல்லத்தில் தங்கி சிகிச்சை பெற்று வந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல்நிலை கடந்த 27-ந் தேதி நள்ளிரவில் திடீரென்று மோசமானது. இதைத்தொடர்ந்து நள்ளிரவு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். கருணாநிதியின் உடல்நிலையை டாக்டர்கள் குழுவினர் 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர். அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இன்றுடன் 10 நாட்கள் ஆகின்றன.

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி , மத்திய மந்திரிகள், கேரள முதல் மந்திரி பினராயி விஜயன், ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு உள்பட உள்பட பல்வேறு தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும்  ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய் அஜித் உள்பட திரையுலக பிரபலங்கள் ஆஸ்பத்திரிக்கு வந்து உடல்நலம் விசாரித்து சென்றனர்.


10-வது நாளாக  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும், திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நிலையில், திடீர் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.இதனால், கடந்த சில நாட்களாக தொண்டர்கள் வருகை குறைந்து இயல்பு நிலைக்கு திரும்பியிருந்த காவேரி மருத்துவமனை வளாகம் மீண்டும் பரபரப்பான சூழலுக்கு திரும்பியுள்ளது.  

காவேரி மருத்துவமனைக்கு கருணாநிதியின் குடும்பத்தினர் வருகை தந்துள்ளனர். திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நிலை குறித்து விசாரிக்க அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் காவேரி மருத்துவமனைக்கு வருகை தந்துள்ளனர்.  திமுக எம்எல்ஏக்கள் டிஆர்பி ராஜா, அன்பில் மகேஷ், செந்தில்குமார், வாகை சந்திரசேகர், செஞ்சி மஸ்தான், பல்லாவரம் கருணாநிதி, அன்பரசன் உள்ளிட்டோரும் வருகை தந்துள்ளனர். இதேபோல்,  டெல்லியில் இருந்து திமுக எம்.பிக்கள், திருச்சி சிவா, டிகேஎஸ் இளங்கோவன் ஆகியோர்  விமானம் மூலமாக சென்னை புறப்பட்டுள்ளனர். 



தொடர்புடைய செய்திகள்

1. தலைநகர் டெல்லியில் பட்டப்பகலில் துணிகரம்: வங்கி காசாளர் சுட்டுக்கொலை; ரூ.10 லட்சம் கொள்ளை
டெல்லியில் நடந்த வங்கி கொள்ளையின் போது, வங்கி காசாளர் சுட்டுக்கொல்லப்பட்டதுடன், ரூ.10 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது
2. டெல்லி அருகே தீ விபத்தில் பலரை காப்பாற்றிய பெண் பலி
டெல்லி அருகே தீ விபத்தில் பலரை காப்பாற்றிய பெண், மூச்சுத்திணறி பரிதாபமாக பலியானார்.
3. டெல்லியில் அ.தி.மு.க. எம்.பி.க்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
டெல்லியில் அ.தி.மு.க. எம்.பி.க்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.
4. டெல்லிக்கு மாநில அந்தஸ்து கோரும் மனு - சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி
டெல்லிக்கு மாநில அந்தஸ்து கோரும் மனு மீதான வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது.
5. டெல்லியில் விவசாயிகள் போராட்டம்: ஹைட்ரோகார்பன் திட்ட ஒப்பந்த நகலை எரித்ததால் பரபரப்பு
டெல்லியில் விவசாயிகள் நடத்திய போராட்டத்தில், ஹைட்ரோகார்பன் திட்ட ஒப்பந்த நகலை எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.