மாநில செய்திகள்

கருணாநிதி நலம் பெறுவார் - தொண்டர்கள் நம்பிக்கை + "||" + Karunanidhi gets good - volunteers believe

கருணாநிதி நலம் பெறுவார் - தொண்டர்கள் நம்பிக்கை

கருணாநிதி நலம் பெறுவார் - தொண்டர்கள் நம்பிக்கை
கருணாநிதி விரைவில் நலம் பெறுவார் என தொண்டர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். #Karunanidhi
சென்னை,

உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

டாக்டர்களின் தீவிர சிகிச்சையால் அவரது உடல்நிலை படிப்படியாக நல்ல முன்னேற்றம் அடைந்து வருகிறது என தெரிவிக்கப்பட்டது. இதுதவிர கல்லீரல் நோய்க்கு சிகிச்சை அளிப்பதற்காக லண்டனில் இருந்து புகழ் பெற்ற டாக்டர் முகமது ரேலா வரவழைக்கப்பட்டார். அவரும் காவேரி ஆஸ்பத்திரி டாக்டர் குழுவினருடன் இணைந்து கருணாநிதிக்கு சிகிச்சை அளித்து வருகிறார். கருணாநிதியின் உடல்நிலையை தொடர்ந்து கவனித்து வரும் மருத்துவக்குழுவினர், அவருக்கு தினந்தோறும் பல்வேறு வகையான மருத்துவ பரிசோதனைகள் செய்து, சிகிச்சை அளித்து வருகின்றனர். இதனால் 24 மணி நேரமும் அவரது உடல்நிலை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.


இந்நிலையில் காவேரி மருத்துவமனை அவருடைய உடல்நிலை தொடர்பான அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நிலையில் சிறிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்று மருத்துவமனையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுக தலைவர் கருணாநிதி உடல் நிலையில் சிறிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கருணாநிதியின் வயது மூப்பு காரணமாக அவரது உடலில் உள்ள முக்கிய உறுப்புகளை செயல்பட வைப்பது சவாலாக உள்ளது, 24 மணி நேரத்தில் சிகிச்சைக்கு கருணாநிதி எப்படி ஒத்துழைக்கிறார் என்பதை பொறுத்தே கணிக்க முடியும் என்று காவேரி மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிந்தது.

திமுக தலைவர் கருணாநிதி உடல் நிலையில் சிறிய பின்னடைவு ஏற்பட்டதை வந்த தகவலை அடுத்து காவேரி மருத்துவமனை முன் திமுக தொண்டர்கள் திரண்டனர். தங்களது தலைவர் நிச்சயம் நல்ல உடல்நலத்துடன் திரும்புவார் என்ற நம்பிக்கையோடு காத்திருப்பதாக தெரிவித்தனர். மேலும், எழுந்து வா தலைவா, எழுந்து வா தலைவா, என உணர்ச்சிப்பெருக்குடன் கோஷங்களை  தொண்டர்கள்  தொடர்ந்து எழுப்பி வந்தனர்.

பின்னர் இரவு 10 மணியளவில் திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின், கனிமொழி எம்.பி உள்பட அனைத்து திமுக எம்.எல்.ஏ.க்களும் மருத்துவமனையில் இருந்து புறப்பட்டுச் சென்றனர். திமுகவின் முக்கிய நிர்வாகிகளும் புறப்பட்டுச் சென்றனர். பின்னர் மீண்டும் காவேரி மருத்துவமனைக்கு கனிமொழி மற்றும் பொன்முடி ஆகியோர் வருகை தந்தனர்.

நள்ளிரவைத் தாண்டியும் கூட்டம் அதிகரித்த வண்ணம் இருந்தது. தொண்டர்கள் வருகையை தொடர்ந்து பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. போலீஸ் குவிக்கப்பட்டது. மருத்துவமனைக்கு தொண்டர்களின் வருகை அதிகரித்தால் காவேரி மருத்துவமனை பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.  பல இடங்களில் போக்குவரத்து நெரிசல்  ஏற்பட்டது. மேலும் திமுக தலைவர் கருணாநிதி விரைவில் நலம் பெறுவார் என தொண்டர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர். இதனால் அந்தப் பகுதி முழுவதும் பரபரப்பாக காணப்பட்டு வருகிறது.