மாநில செய்திகள்

சென்னையில் பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றிற்கு ரூ.80.05 ஆக விற்பனை + "||" + Petrol price in Chennai is Rs 80.05 per liter

சென்னையில் பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றிற்கு ரூ.80.05 ஆக விற்பனை

சென்னையில் பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றிற்கு ரூ.80.05 ஆக விற்பனை
சென்னையில் பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றிற்கு ரூ.80.05 ஆக இன்று விற்பனை செய்யப்படுகிறது. #PetrolPrice
சென்னை,

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயித்து கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியிருந்தது.  கடந்த மே மாதத்தில் இவற்றின் விலை உயர்ந்து கொண்டே சென்றது.   பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றிற்கு ரூ.85 வரை விற்பனை செய்யப்பட்டு வாகன ஓட்டிகள் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இதனை தொடர்ந்து விலை குறைப்பு நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டது.  பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தினந்தோறும் நிர்ணயிக்கும் முறை அமலுக்கு வந்தது.  இந்த நிலையில் சென்னையில் கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வருகிறது.

சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றிற்கு நேற்றைய விலையில் இருந்து 0.09 பைசாக்கள் உயர்ந்து ரூ. 80.05க்கும் மற்றும் டீசல் விலை லிட்டர் ஒன்றிற்கு 0.06 பைசாக்கள் உயர்ந்து ரூ. 72.35க்கும் விற்பனை செய்யப்படுகிறது.  இதனால் பெட்ரோல் விலை ரூ.80ஐ மீண்டும் தொட்டுள்ளது.

சென்னையில் நேற்று பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றிற்கு ரூ. 79.96க்கும் மற்றும் டீசல் விலை லிட்டர் ஒன்றிற்கு ரூ. 72.29க்கும் விற்பனை செய்யப்பட்டது.


தொடர்புடைய செய்திகள்

1. பெட்ரோல் டீசல் விலை உயர்வு, டீசல் விலை ரூ.80- ஐ தாண்டியது
சென்னையில் டீசல் விலை லிட்டருக்கு 14 காசுகள் அதிகரித்து ரூ.80.04 க்கு விற்பனையாகிறது.
2. புதிய உச்சத்தை தொடுகிறது டீசல் விலை 80 ரூபாயை நெருங்கியது 5-ந்தேதி இறங்கிய வேகத்தில் மீண்டும் ஏறியது
கடந்த 5-ந்தேதி இறங்கிய வேகத்தில் டீசல் விலை மீண்டும் ஏறியது. லிட்டர் 80 ரூபாயை நெருங்கியது.
3. பெட்ரோல், டீசல் விலை கடும் உயர்வு: எண்ணெய் நிறுவன அதிபர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த உலக மற்றும் இந்திய எண்ணெய் நிறுவன அதிபர்களுடன் பிரதமர் மோடி இன்று(திங்கட்கிழமை) டெல்லியில் ஆலோசனை நடத்துகிறார்.
4. சென்னையில் பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு ரூ.85.99க்கு விற்பனை செய்யப்படுகிறது
சென்னையில் பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு 7 பைசாக்கள் உயர்ந்து ரூ.85.99க்கு விற்பனை செய்யப்படுகிறது.
5. பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மாணவர் காங்கிரசார் சைக்கிள் ஊர்வலம்
பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி மாணவர் காங்கிரஸ் சார்பில் நேற்று சைக்கிள் ஊர்வலம் நடந்தது.