மாநில செய்திகள்

மத்திய மந்திரி நிதின் கட்காரியுடன் முதல் அமைச்சர் பழனிசாமி சந்திப்பு + "||" + CM Palanisamy discusses with Union Minister Nitin Gadkari

மத்திய மந்திரி நிதின் கட்காரியுடன் முதல் அமைச்சர் பழனிசாமி சந்திப்பு

மத்திய மந்திரி நிதின் கட்காரியுடன் முதல் அமைச்சர் பழனிசாமி சந்திப்பு
சென்னையில் மத்திய மந்திரி நிதின் கட்காரியை முதல் அமைச்சர் பழனிசாமி இன்று சந்தித்து பேசினார்.
சென்னை,

தி.மு.க. தலைவர் கருணாநிதி, உடல்நல குறைவின் காரணமாக கடந்த மாதம் 27ந் தேதி நள்ளிரவு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். கருணாநிதியின் உடல்நிலையை டாக்டர்கள் குழுவினர் 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர். 

அவருடைய உடல்நிலையில் முன்னேற்றம் காணப்பட்டு வந்த நிலையில், நேற்று பின்னடைவு ஏற்பட்டுள்ளது என மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே மத்திய மந்திரி நிதின் கட்காரி, கருணாநிதியை சந்திக்க நேற்று சென்னை வந்தார்.  காவேரி மருத்துவமனை வந்த அவர், கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரித்தார்.  பின்னர் சென்னை அடையாறில் உள்ள தனியார் ஓட்டலில் அவர் தங்கினார்.

இந்த நிலையில், முதல் அமைச்சர் பழனிசாமி சென்னை அடையாறு தனியார் ஓட்டலில் தங்கியுள்ள மத்திய மந்திரி கட்காரியை இன்று சந்தித்து பேசினார்.

அவர் தமிழகத்தில் நடைபெற்று வரும் உயர்மட்ட மேம்பாலம் மற்றும் சாலை பணிகள் உள்ளிட்டவை பற்றி கட்காரியுடன் ஆலோசனை மேற்கொண்டார்.  இந்த ஆலோசனையில் மாநில நெடுஞ்சாலை துறை அதிகாரிகளும் பங்கேற்று உள்ளனர்.

அதிகம் வாசிக்கப்பட்டவை