தேசிய செய்திகள்

காஷ்மீரில் பயங்கரவாதிகள் ஊடுருவல் முறியடிப்பு; ராணுவ மேஜர்- 3 இந்திய வீரர்கள் வீர மரணம்! + "||" + Gurez: Four armymen including major martyred in J&K, 4 terrorists killed

காஷ்மீரில் பயங்கரவாதிகள் ஊடுருவல் முறியடிப்பு; ராணுவ மேஜர்- 3 இந்திய வீரர்கள் வீர மரணம்!

காஷ்மீரில் பயங்கரவாதிகள் ஊடுருவல் முறியடிப்பு; ராணுவ மேஜர்- 3 இந்திய வீரர்கள் வீர மரணம்!
பயங்கரவாதிகள் ஊடுருவலைத் தடுக்கும் முயற்சியில் இந்திய வீரர்கள் 4 பேர் வீரமரணம் அடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குரெஸ்

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பந்திபோர் மாவட்டம் குரெஸ் அருகே கோவிந்த் நல்லா பகுதியில் பயங்கரவாதிகள் ஊடுருவும் முயற்சியில் ஈடுபட்டனர். அவர்களைத் தடுக்க இந்திய ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர். ஊடுருவும் குழுவில் 8 பேர் இருந்ததாக தகவல்கள் கூறப்பட்டன. 

அவர்களில் 4 பேர் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு தப்பிச் சென்றனர். இந்த தாக்குதலில் 4  பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்நிலையில் இந்திய தரப்பில் ராணுவ மேஜர் கே பி ரானே, ஹவால்தார் வீரர்கள் ஜேமி சிங், விக்ரம்ஜீத், ரைஃபிள் மேன் மந்தீப் ஆகியோர் வீரமரணம் அடைந்தனர். 

இதையடுத்து கூடுதல் படைகள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன. தொடர்ந்து பயங்கராவதிகளைத் தேடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த வாரம் பேசிய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜம்மு காஷ்மீரின் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் நடைபெறும் ஒவ்வொரு ஊடுருவல் முயற்சியும் முறியடிக்கப்படும் என்றார்

நான் பாதுகாப்பு அமைச்சராக ஊடுருவலை முறியடிக்க இங்கே இருக்கிறேன். எங்களது நிலைப்பாட்டில் எந்தவித மாறுபாடும் இல்லை. எல்லையில் வலிமையுடன் நிற்கிறோம் என்று கூறினார். 

ஜம்மு காஷ்மீர் போலீசார் திங்களன்று அல் கொய்தாவுடன் இணைந்த அஸ்ஸார் கஸ்வத் உல் ஹிந்த்  இயக்கம்  பெரிய பயங்கரவாதத் திட்டத்தை முறியடித்த சுதந்திர தினத்தன்று புது டெல்லியில் தொடர் குண்டுவெடிப்புகளை நடத்த இந்த தீவிரவாதிகள் திட்டமிட்டு இருந்தனர் என்பது குறிப்பிடதக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. உள்ளூர் போராளிகள் மண்ணின் மைந்தர்கள் -மெகபூபா முப்தி
உள்ளூர் போராளிகள் இந்த மண்ணின் மைந்தர்கள் என காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரி மெகபூபா முப்தி கூறி உள்ளார்.
2. மொபைல் போனில் 10 நாட்கள் தொடர்ந்து கேம் விளையாடியவருக்கு நேர்ந்த கதி?
மொபைல் போனில் 10 நாட்கள் தொடர்ந்து கேம் விளையாடியவர் மனநலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
3. இந்திய எல்லையில் கடந்த 2 நாட்களில் அத்துமீறி 4 முறை தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் ராணுவம்
எல்லைக்கு அப்பால் இருந்து கடந்த 2 நாட்களில் பாகிஸ்தான் ராணுவம், நான்கு முறை அத்துமீறித் தாக்குதல் நடத்தியிருப்பதாக, இந்திய ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.
4. 2014-ம் ஆண்டிலிருந்து ஜம்மு காஷ்மீரில் 838 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை - மத்திய அரசு
2014-ம் ஆண்டிலிருந்து ஜம்மு காஷ்மீரில் 838 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
5. ஜம்மு காஷ்மீர்: என்கவுண்டரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற என்கவுண்டரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.