தேசிய செய்திகள்

மோடியின் போலியான நல்ல நாள் வாக்குறுதிக்கு எதிராக கவனம் செலுத்த வேண்டும் - ராகுல்காந்தி + "||" + Must give alternative to Modi’s ‘bogus achche din’: Rahul Gandhi at Congress parliamentary party meet

மோடியின் போலியான நல்ல நாள் வாக்குறுதிக்கு எதிராக கவனம் செலுத்த வேண்டும் - ராகுல்காந்தி

மோடியின் போலியான நல்ல நாள்  வாக்குறுதிக்கு எதிராக கவனம் செலுத்த வேண்டும் - ராகுல்காந்தி
மோடிஜியின் போலியான நல்ல நாள் வாக்குறுதிக்கு எதிராக கவனம் செலுத்த வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் ராகுல்காந்தி பேசினார். #RahulGandhi
புதுடெல்லி

காங்கிரஸ் பாராளுமன்ற  உறுப்பினர்கள்  கூட்டத்தில்  கலந்து கொண்டு கட்சி தலைவர் ராகுல்காந்தி பேசும் போது கூறியதாவது;-

வெறுப்புணர்வை காட்டுகிற, அரசியலமைப்பு மீது  பிரிவினை  மற்றும் வன்முறையை காட்டுகிற நரேந்திர மோடியின் அரசை மாற்ற  வருகிற 2019  தேர்தலில் காங்கிரஸ் கட்சியும் அதன் கூட்டாளிகளும்  ஆதரிக்க இந்திய மக்கள் விரும்புகிறார்கள். அவர்களது பிரச்சினைகளை புரிந்துகொண்டு, நாட்டில் வறுமை, வேலையின்மை மற்றும் சமத்துவமின்மையை குறைப்பதற்கான தீர்வுகளை வழங்க வேண்டும். காங்கிரஸ் கட்சி இந்திய விவசாயிகளுக்கு நம்பிக்கையை மீண்டும் அளிப்பதாக உள்ளது. இளைஞர்களுக்கு, கண்ணியமான வாழ்க்கை மற்றும் கண்ணியமான வருமானம்  அளிக்கும். இந்திய அரசியலமைப்பின் மீது மிதமிஞ்சிய பிரிவினையும் வன்முறையும்  காட்டும் அதிகாரம் மீண்டும்  திரும்புவதை  தடுக்க வேண்டும்.

நரேந்திர மோடி அரசாங்கத்தின் கீழ் இந்தியாவின் ஆட்சி நெருக்கடியில் உள்ளது . ஊழல்,மொத்த பொருளாதார தோல்வி,திறமையற்றது மற்றும் சமூகப் பிரிவினையை பரப்புதல் ஆகியவை  உச்சத்தில் உள்ளது.

தற்போதைய ஆளும் அரசுக்கு எதிரான கோபத்தின் எழுச்சி ஒருபுறம் உள்ளது, அது நம் அனைவரும் இந்திய மக்களுக்கு அவர்களுக்கு தகுதியுடைய மாற்றத்தை கொடுக்க மிகவும் கடினமாக உழைக்க வேண்டும். மோடிஜியின் போலியான நல்ல நாள்  வாக்குறுதிக்கு எதிராக கவனம் செலுத்த வேண்டும்.  

பா.ஜ.க. மற்றும் ஆர்எஸ்எஸ் நாட்டின் அமைப்புகளை அழித்து விட்டன. ஆர்எஸ்எஸ் மற்றும் பிஜேபி ஆட்சிக்கு வந்த பின்னர், நமது  அமைப்புகளில் ஒவ்வொன்றிலும் ஒரு திட்டமிட்ட தாக்குதல் நடத்தியுள்ளதை பார்க்கிறோம். நவீன இந்தியாவில், இந்த அமைப்புகள் ஜனநாயகத்தின் கோயில்களாக அழைக்கப்பட்டன. இன்றைய தினம் ஆர்.எஸ்.எஸ் ஒவ்வொரு அமைப்பையும்  அழிக்க வேண்டுமென்று எண்ணுகிறது. ஒவ்வொரு அமைப்பிலும் தங்களுக்கு வேண்டியவர்களை ஊடுருவ செய்கின்றன இதனால்  மேலும் நிறுவனங்களின் இயல்பு மாறிக்கொண்டே வருகிறது.

அசாமில்  சமீபத்தில் வெளியிடப்பட்ட வரைவு குடிமக்கள் தேசிய பதிவு (NRC) இன்று மிக முக்கியமான மற்றும் அவசர பிரச்சினையாக உள்ளது. அந்த மாநிலத்தில் பெரிய பாதுகாப்பின்மை நிலவுகிறது. 

2014 ஆம் ஆண்டு  மோடி ஜி பிரதமரான பிறகு சுந்தந்திரம் அடைந்த  பிறகு 70 ஆண்டுகளாக  மெதுவான பயணிகள் ரெயில் என்று குறிப்பிடார். தற்போது  அவரது வழிகாட்டுதல் மற்றும் ஆட்சியில்  மேஜிக்கல் ரெயிலாக மாறும் என கூறினார்.  மோடி  ஆட்சிக்கு வந்து 4 வருடங்களாகிறது. துரதிர்ஷடவசமாக பொறுப்பான பயணிகளுக்கு  என்ன நடக்கிறது என்ற கவலை இல்லாமல் இன்று ஒரு சர்வாதிகரமான  தகுதியற்ற மற்றும் திமிர்பிடித்து  ரெயிலை இயக்கி வருகிறார்.