மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்த அதிரடி உத்தரவு + "||" + Action to strengthen security throughout Tamil Nadu

தமிழகம் முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்த அதிரடி உத்தரவு

தமிழகம் முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்த அதிரடி உத்தரவு
அனைத்து மாவட்டங்களிலும் பாதுகாப்பை பலப்படுத்த மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டுகளுக்கு டிஜிபி உத்தரவு பிறப்பித்து உள்ளார். #DMK #Karunanidhi
சென்னை

திமுக தலைவர் கருணாநிதிக்கு காவேரி மருத்துவமனையில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கருணாநிதியின் உடல்நலம் குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மருத்துவமனைக்கு சென்று விசாரித்து செல்கின்றனர். இதற்கிடையே கருணாநிதியின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று காலை முதலே திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் சற்றே பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின.

பின்னர் மாலை 6.30 மணியளவில் கருணாநிதியின் உடல்நிலைக் குறித்து காவேரி மருத்துவமனை அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அந்த அறிக்கையில், கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த அறிக்கை திமுக தொண்டர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து காவேரி மருத்துவமனை வெளியே தொண்டர்கள் குவியத் தொடங்கினர். தொண்டர்களை கட்டுப்படுத்த போலீசாரும் தங்களது பாதுகாப்பை பலப்படுத்தினர். அத்துடன் சென்னை முழுவதும் முக்கிய இடங்களில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். சுமார் 300 போலீசார் காவேரி மருத்துவமனை வளாகத்தில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

காவேரி மருத்துவமனையில் திமுக முக்கிய நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். ராஜரத்தினம் மைதானத்தில் ஏராளமான காவலர்கள் முகாமிட்டுள்ளனர் .

தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்களில் பாதுகாப்பை பலப்படுத்த மண்டல காவல்துறை தலைவர்கள், துணைத் தலைவர்கள், எஸ்பிக்கள், ஆணையர்களுக்கு டிஜிபி உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

 தமிழகம் முழுவதும் பாதுகாப்பை உறுதிபடுத்த காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு டிஜிபி அறிவுறுத்தி உள்ளார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை