மாநில செய்திகள்

காவேரி மருத்துவமனையில் 8 துணை ஆணையர்கள் தலைமையில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு + "||" + More than 300 police personnel are headed by eight deputy commissioners at Cauvery hospital

காவேரி மருத்துவமனையில் 8 துணை ஆணையர்கள் தலைமையில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு

காவேரி மருத்துவமனையில் 8 துணை ஆணையர்கள் தலைமையில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு
காவேரி மருத்துவமனையில் 8 துணை ஆணையர்கள் தலைமையில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். #KarunanidhiHealth #Karunanidhi #KauveryHospital
சென்னை,

திமுக தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவால் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலையில் கடும் பின்னடைவு ஏற்பட்ட நிலையில் 24 மணி நேர தீவிர கண்காணிப்புக்குப் பிறகே கூற முடியும் என்று மருத்துவமனை சார்பில் நேற்று தெரிவிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில் அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாகவே உள்ள நிலையில் தற்போது காவேரி மருத்துவமனை சார்பில் மருத்துவ அறிக்கை தற்போது வெளியாகி உள்ளது.

இது தொடர்பாக காவேரி மருத்துவமனையின் செயல் இயக்குநர் டாக்டர் அரவிந்தன் செல்வராஜ் வெளியிட்ட அறிக்கையில், ''கருணாநிதியின் உடல் நிலை கடந்த சிலமணி நேரங்களாக மிக மோசமான பின்னடைவைச் சந்தித்து வருகிறது. முக்கிய உறுப்புகளின் செயல்பாட்டில் கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அதிகபட்ச மருத்துவ உபகரணங்கள் உதவியுடன் அவருடைய உடல் உறுப்புகள் செயல்பாட்டில் வைக்கப்பட்டுள்ளன. அவரது உடல்நிலை தொடர்ந்து மிகவும் கவலைக்கிடமாகவும், சீரற்ற நிலையிலும் உள்ளது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நிலை மிகவும் மோசமாக இருப்பதாக மருத்துவமனை அறிக்கை வெளியானதைத்தொடர்ந்து, மருத்துவமனை முன்பு திமுக தொண்டர்கள் குவிந்து வருகின்றனர். தொடர்ந்து தொண்டர்கள் வருகை அதிகமாக இருப்பதால், 8 துணை ஆணையர்கள் தலைமையில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.  மருத்துவமனைக்கு வெளியில் காத்திருப்பவர்கள் உள்ளே செல்ல அனுமதி இல்லை என்று காவல்துறையினர் ஒலிப்பெருக்கி மூலம் அறிவித்து வருகின்றனர். மருத்துவமனை முன்பு கூடியுள்ள தொண்டர்கள் கண்ணீருடன் எழுந்து வா தலைவா. எழுந்து வா தலைவா என கோஷம் எழுப்பி வருகின்றனர். காவேரி மருத்துவமனைக்கு 50-க்கும் மேற்பட்ட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். 

திமுக தலைவர் கருணாநிதி இல்லம் அமைந்துள்ள கோபாலபுரத்திலும் தொண்டர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால், கோபாலபுரத்திலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 

அதிகம் வாசிக்கப்பட்டவை