மாநில செய்திகள்

கருணாநிதியின் உடல் அதிகாலை 4 மணி முதல் ராஜாஜி ஹாலில் அஞ்சலிக்கு வைக்கப்படும்: திமுக அறிவிப்பு + "||" + Karunanidhi's body will be brought to Rajaji Hall at 4am for public relief: DMK announcement

கருணாநிதியின் உடல் அதிகாலை 4 மணி முதல் ராஜாஜி ஹாலில் அஞ்சலிக்கு வைக்கப்படும்: திமுக அறிவிப்பு

கருணாநிதியின் உடல் அதிகாலை 4 மணி முதல் ராஜாஜி ஹாலில் அஞ்சலிக்கு வைக்கப்படும்: திமுக அறிவிப்பு
பொதுமக்கள் அஞ்சலிக்காக அதிகாலை 4 மணிக்கு ராஜாஜி ஹாலுக்கு கருணாநிதி உடல் கொண்டு வரப்படும் என்று திமுக அறிவித்துள்ளது. #RIPKalaignar #RIPKarunanidhi
சென்னை,

வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை கோபாலபுரம் இல்லத்தில் தங்கி சிகிச்சை பெற்று வந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல்நிலை கடந்த 27-ந் தேதி நள்ளிரவில் திடீரென்று மோசமானது. இதைத்தொடர்ந்து நள்ளிரவு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில்,  கருணாநிதியின் உடல் நிலை பின்னடைவு ஏற்பட்டதாக காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. 

11-வது நாளாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திமுக தலைவர் கருணாநிதி, இன்று மாலை 6.10 மணியளவில் காலமானர்.  திமுக தலைவர் கருணாநிதி மறைவையொட்டி நாளை அரசு விடுமுறை  அளிக்கப்படுவதாக  தமிழக அரசு அறிவித்துள்ளது. திமுக தலைவர் கருணாநிதியின் மறைவையொட்டி 7 நாட்களுக்கு தமிழக அரசு துக்கம் அனுசரிக்கப்படும் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்திய அரசியல் வரலாற்றில் மிகப்பெரும் ஆளுமைகளில் ஒருவரான கருணாநிதியின் மறைவுக்கு, ஜனாதிபதி, பிரதமர் மோடி, தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி உள்பட தேசிய தலைவர்கள், திரை ஆளுமைகள் என பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்தனர். 

இந்த நிலையில், திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு குடும்பத்தினர் இறுதி மரியாதை செலுத்த கோபாலபுரம் இல்லத்தில் 8.30 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரையிலும், சிஐடி காலனியில் அதிகாலை 3 மணி வரையிலும் இறுதி மரியாதை செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன் பின்னர், அதிகாலை 4 மணி முதல் ராஜாஜி ஹாலுக்கு கொண்டு வரப்பட்டு கழக உடன்பிறப்புகளும், பொதுமக்களுக்கும் அரசியல் கட்சி தலைவர்களுக்கும் இறுதி வணக்கம் செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்று திமுக வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


தொடர்புடைய செய்திகள்

1. பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்வு
பெட்ரோல், டீசல் விலை மீண்டும் தினந்தோறும் உயரத்துவங்கியுள்ளது வாகன ஓட்டிகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
2. பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்வு
பெட்ரோல், டீசல் விலை மீண்டும் தொடர்ந்து அதிகரித்து வருவது வாகன ஓட்டிகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
3. புதிய உச்சத்தில் தங்கம் விலை!
பண்டிகை காலம் என்பதாலும் நாடு முழுவதும் திருமண சீசன் களை கட்ட உள்ளதாலும் தங்கத்தின் தேவை அதிகரிக்க துவங்கியுள்ளது.
4. கருணாநிதியின் அழகு தமிழுக்கு மயங்காதவர் யாரும் இல்லை; சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் வாசிப்பு
கருணாநிதியின் அழகு தமிழுக்கு மயங்காதவர் யாரும் இல்லை என சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.
5. சென்னை மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் குடும்பத்தினருடன் மு.க. ஸ்டாலின் மரியாதை
சென்னை மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் குடும்பத்தினருடன் சென்று தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று மரியாதை செலுத்தினார்.