மாநில செய்திகள்

மெரினாவில் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய அனுமதி வழங்க வேண்டும் - ஸ்டாலின் மீண்டும் வேண்டுகோள் + "||" + DMK demands Government permission to bury Karunanidhi at the Marina

மெரினாவில் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய அனுமதி வழங்க வேண்டும் - ஸ்டாலின் மீண்டும் வேண்டுகோள்

மெரினாவில் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய அனுமதி வழங்க வேண்டும் - ஸ்டாலின் மீண்டும் வேண்டுகோள்
மெரினாவில் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய அனுமதி வழங்க வேண்டும் என்று அரசுக்கு ஸ்டாலின் மீண்டும் வேண்டுகோள் விடுத்துள்ளார். #Karunanidhi #DMK #ripkarunanidhi #Stalin #EPS

சென்னை,

இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், தமிழக முன்னாள் முதல்-அமைச்சரும், திமுக தலைவருமான கருணாநிதி உடல் நலக் குறைவால் இன்று மாலை காலமானார். அவருக்கு வயது 95. மெரினாவில் அண்ணா நினைவிட வளாகத்திற்குள் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று திமுக அரசுக்கு கோரிக்கையை விடுத்தது. இந்நிலையில் அரசு தரப்பில் அளிக்கப்பட்ட பதிலில், கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய மெரினாவில் இடம் ஒதுக்கீடு செய்ய இயலவில்லை, மாற்று இடம் தர தயாராக உள்ளோம் என தெரிவிக்கப்பட்டது. 

இந்நிலையில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் அரசுக்கு வேண்டுகோளை விடுத்துள்ளார். மெரினாவில் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய அனுமதி வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். 

80 ஆண்டு கால பொதுவாழ்வுக்கு சொந்தக்காரரான கருணாநிதிக்கு உரிய மரியாதையுடனும், அரசியல் ரீதியாக அவருக்குள்ள தார்மீக உரிமையின் அடிப்படையிலும் தமிழக அரசு அனுமதி வழங்க வேண்டும் என்று மு.க. ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். 


தொடர்புடைய செய்திகள்

1. கோடநாடு சம்பவத்தை கூலிப்படையினர் செய்தனர்; திமுக நாடகம் - முதல்-அமைச்சர் பழனிசாமி
கோடநாடு சம்பவத்தை கூலிப்படையினர் செய்தனர் என முதல்-அமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார்.
2. கோடநாடு விவகாரம்: இன்று மாலை ஆளுநரை சந்தித்து மனு அளிக்கிறார் மு.க ஸ்டாலின்
கோடநாடு விவகாரம் தொடர்பாக இன்று மாலை 5.30 மணிக்கு ஆளுநரை சந்தித்து திமுக தலைவர் ஸ்டாலின் மனு அளிக்கிறார்.
3. பிரதமர் நரேந்திர மோடி வாஜ்பாயும் கிடையாது, கூட்டணியும் கிடையாது - மு.க.ஸ்டாலின் அறிக்கை
பிரதமர் நரேந்திர மோடி வாஜ்பாயும் கிடையாது, கூட்டணியும் கிடையாது என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
4. போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் மெரினா லூப் சாலையில் மீண்டும் மீன் வியாபாரம் தொடங்கியது பள்ளத்தை மேடாக்கி மீனவ பெண்களே கடைகள் அமைத்தனர்
போக்குவரத்துக்கு சிறிதும் இடையூறு இல்லாமல் மெரினா லூப் சாலையில் மீண்டும் மீன் வியாபாரம் ஜோராக நடக்க தொடங்கியிருக்கிறது. மாநகராட்சி விதிகளை மீறாமல் பள்ளத்தை மேடாக்கி மீனவ பெண்களே கடைகள் அமைத்து விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
5. கருணாநிதி சிலை திறப்பு நிகழ்வில் பங்கேற்க முடியவில்லை: கமல்ஹாசன்
கருணாநிதி சிலை திறப்பு நிகழ்வில் பங்கேற்க முடியவில்லை என்று கமல்ஹாசன் தெரிவித்து உள்ளார்.