மாநில செய்திகள்

கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய மெரினாவில் இடம் ஒதுக்க திமுக தொண்டர்கள் போராட்டம் + "||" + DMK volunteers struggle in front of the hospital seeking residence in Marina

கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய மெரினாவில் இடம் ஒதுக்க திமுக தொண்டர்கள் போராட்டம்

கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய மெரினாவில் இடம் ஒதுக்க திமுக தொண்டர்கள் போராட்டம்
திமுக தலைவர் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய மெரினாவில் இடம் ஒதுக்க கோரி திமுக தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். #Karunanidhi #DMK #ripkarunanidhi
சென்னை,

தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவால் சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். நேற்றிலிருந்து அவருடைய உடல்நிலையில் திடீர் பின்னடைவு ஏற்பட்டது. மருத்துவமனையும் உறுதிசெய்தது. கடந்த 11 நாட்களாக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த கருணாநிதி இன்று மாலை 6.10 மணியளவில் காலமானார். 

கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய சென்னை மெரினாவில் உள்ள அண்ணா சமாதி பின்புறம் அனுமதி அளிக்க வேண்டும் என்று திமுக செயல் தலைவர் மு.க ஸ்டாலின் உள்ளிட்ட அக்கட்சியின் மூத்த தலைவர்கள் முதல் அமைச்சர் பழனிசாமியை நேரில்  சந்தித்து கோரிக்கை விடுத்தனர். ஆனால், சட்டச்சிக்கல்கள் காரணமாக மெரினாவில் உடல் அடக்கம் செய்ய அனுமதி அளிக்க முடியாது எனவும், அதற்கு மாறாக காந்தி மண்டபம் அருகே அடக்கம் செய்வதற்கு 2 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்ய தமிழக அரசு தயாராக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழக அரசின் இந்த அறிவிப்பை அறிந்ததும் காவேரி மருத்துவமனை முன்பு கூடியிருந்த திமுக தொண்டர்கள்  எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பினர். மேலும்,  தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால், போலீசார் இலேசான தடியடி நடத்தி நிலமையை சீர் செய்தனர். தமிழக அரசு மறுப்பு தெரிவித்தற்கு எதிராக , தலைமை நீதிபதியிடம் முறையிட திமுக முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. மெரினாவில் திமுக தலைவர் கருணாநிதி நினைவிடத்தில் நடிகை திரிஷா அஞ்சலி
மெரினாவில் திமுக தலைவர் கருணாநிதி நினைவிடத்தில் நடிகை திரிஷா அஞ்சலி செலுத்தினார். #Karunanidhi
2. திமுக தலைவர் கருணாநிதி நல்லடக்கம்: தலைவர்கள் மற்றும் தொண்டர்களுக்கு ஸ்டாலின் நன்றி
திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது தொடர்பாக தலைவர்கள் மற்றும் தொண்டர்களுக்கு ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். #Karunanidhi #RIPKarunanidhi
3. ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான்’ - சந்தனபெட்டியின் மீது வாசகம்
ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான்’ என கருணாநிதி உடல் வைக்கப்பட்ட சந்தனபெட்டியின் மீது வாசகம் எழுதப்பட்டுள்ளது. #MarinaBeach #Karunanidhi #KarunanidhiRIP
4. திமுக தலைவர் கருணாநிதியின் உடல் சிஐடி இல்லத்தில் இருந்து ராஜாஜி அரங்கம் வருகை
திமுக தலைவர் கருணாநிதியின் உடல் சிஐடி இல்லத்தில் இருந்து ராஜாஜி அரங்கத்திற்கு கொண்டு வரப்பட்டது. #Karunanidhi #RIPKarunanidhi
5. மெரினாவில் இடம் கோரிய திமுகவின் மனு மீது இன்று இரவு 10.30 மணிக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரணை
கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய மெரினாவில் இடம் கோரிய திமுகவின் மனு மீது இன்று இரவு 10.30 மணிக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற உள்ளது. #RIPKalaignar #RIPKarunanidhi