மாநில செய்திகள்

மெரினாவில் இடம் கோரிய திமுகவின் மனு மீது இன்று இரவு 10.30 மணிக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரணை + "||" + Investigation in the High Court today at 10.30 pm on the DMK petition filed in Marina

மெரினாவில் இடம் கோரிய திமுகவின் மனு மீது இன்று இரவு 10.30 மணிக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரணை

மெரினாவில் இடம் கோரிய திமுகவின் மனு மீது இன்று இரவு 10.30 மணிக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரணை
கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய மெரினாவில் இடம் கோரிய திமுகவின் மனு மீது இன்று இரவு 10.30 மணிக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற உள்ளது. #RIPKalaignar #RIPKarunanidhi
சென்னை,

தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவால் சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். நேற்றிலிருந்து அவருடைய உடல்நிலையில் திடீர் பின்னடைவு ஏற்பட்டது. மருத்துவமனையும் உறுதிசெய்தது. கடந்த 11 நாட்களாக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த கருணாநிதி இன்று மாலை 6.10 மணியளவில் காலமானார். 

கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய சென்னை மெரினாவில் உள்ள அண்ணா சமாதி பின்புறம் அனுமதி அளிக்க வேண்டும் என்று திமுக செயல் தலைவர் மு.க ஸ்டாலின் உள்ளிட்ட அக்கட்சியின் மூத்த தலைவர்கள் முதல் அமைச்சர் பழனிசாமியை நேரில்  சந்தித்து கோரிக்கை விடுத்தனர். ஆனால், சட்டச்சிக்கல்கள் காரணமாக மெரினாவில் உடல் அடக்கம் செய்ய அனுமதி அளிக்க முடியாது எனவும், அதற்கு மாறாக காந்தி மண்டபம் அருகே அடக்கம் செய்வதற்கு 2 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்ய தமிழக அரசு தயாராக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 தமிழக அரசு மறுப்பு தெரிவித்தற்கு எதிராக,  நீதிமன்றத்தில் திமுக முறையிட்டது. இந்த நிலையில், திமுக தலைவர் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய மெரினாவில் இடம் கோரிய திமுகவின் மனு மீது இன்று இரவு 10.30 மணிக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் ரூ.89 கோடி பட்டுவாடா பட்டியல் வழக்கில் ஐகோர்ட் சரமாரி கேள்வி
ஆர்கே நகர் தேர்தலின்போது ரூ.89 கோடி பட்டுவாடா செய்வதற்காக வைத்திருந்த பட்டியல் பறிமுதல் வழக்கில் ஐகோர்ட் அடுக்குக்கடுக்கான கேள்விகளை எழுப்பி உள்ளது
2. ஜெயலலிதா சொத்துக்களை பராமரிக்க நிர்வாகிகளை நியமிக்க கோரிய வழக்கு: தீபா, தீபக் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
ஜெயலலிதா சொத்துக்களை பராமரிக்க நிர்வாகிகளை நியமிக்க கோரிய வழக்கில் தீபா, தீபக் ஆகியோர் 4 வாரத்தில் பதிலளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
3. கர்நாடக நீதிபதி சென்னை ஐகோர்ட்டுக்கு மாற்றம்
கர்நாடக நீதிபதி சென்னை ஐகோர்ட்டுக்கு மாற்றம் செய்யப்பட்டார்.
4. நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் எச்.ராஜா நேரில் ஆஜராக சென்னை ஐகோர்ட் உத்தரவு
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா 4 வாரத்தில் நேரில் ஆஜராக சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டு உள்ளது.
5. மரங்களை வெட்டினால் 8 வழிச்சாலை திட்டத்துக்கு தடை விதிக்க நேரிடும் -சென்னை ஐகோர்ட் எச்சரிக்கை
சென்னை-சேலம் 8 வழிச்சாலை திட்டத்துக்காக மரங்களை வெட்டக்கூடாது என்ற உத்தரவை மீறினால் 8 வழிச்சாலை திட்டத்துக்கு தடை விதிக்க நேரிடும் என சென்னை ஐகோர்ட் எச்சரித்து உள்ளது.