தேசிய செய்திகள்

திமுக தலைவர் கருணாநிதி மறைவையொட்டி நாளை தேசிய துக்க தினமாக அறிவிப்பு + "||" + National flag to fly at half mast tomorrow in Delhi&all state capitals & throughout the state of Tamil Nadu. #Karunanidhi

திமுக தலைவர் கருணாநிதி மறைவையொட்டி நாளை தேசிய துக்க தினமாக அறிவிப்பு

திமுக தலைவர் கருணாநிதி மறைவையொட்டி நாளை தேசிய  துக்க தினமாக அறிவிப்பு
கருணாநிதிக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் நாளை தேசிய துக்க தினம் கடைபிடிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.#RIPKalaignar #RIPKarunanidhi
புதுடெல்லி,

தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவால் சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். நேற்றிலிருந்து அவருடைய உடல்நிலையில் திடீர் பின்னடைவு ஏற்பட்டது.  கடந்த 11 நாட்களாக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த கருணாநிதி இன்று மாலை 6.10 மணியளவில் காலமானார். 

திமுக தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு  இரங்கல் தெரிவிக்கும் வகையில் நாளை தேசிய துக்க தினம் அனுசரிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. நாளை மத்திய அரசின் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுவதாகவும் மாநில தலைநகரங்களில் தேசிய கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.