மாநில செய்திகள்

மெரினாவில் கருணாநிதிக்கு இடம்: ராகுல் காந்தி வலியுறுத்தல் + "||" + Karunanidhi in Marina Place: Rahul Gandhi

மெரினாவில் கருணாநிதிக்கு இடம்: ராகுல் காந்தி வலியுறுத்தல்

மெரினாவில் கருணாநிதிக்கு இடம்: ராகுல் காந்தி வலியுறுத்தல்
மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய மெரினாவில் இடம் தர வேண்டும் என ராகுல் காந்தி வலியுறுத்தி உள்ளார். #Karunanidhi #RIP
சென்னை,

இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், தமிழக முன்னாள் முதல்-அமைச்சரும், திமுக தலைவருமான கருணாநிதி உடல் நலக் குறைவால் இன்று மாலை காலமானார். அவருக்கு வயது 95. மதியம் திமுக தலைவர்கள் முதல்-அமைச்சர் பழனிசாமியை சந்தித்து பேசினார்கள். அப்போது கருணாநிதி உடலை அடக்கம் செய்ய மெரினாவில் இடம் ஒதுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியது.


திமுக தலைவர்களில் ஒருவரான துரைமுருகன் செய்தியாளர்களிடம் பேசுகையில், அண்ணா சமாதிக்கு அருகே கருணாநிதிக்கு நினைவிடம் வைக்க முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்தோம். பார்ப்போம் என முதலமைச்சர் பழனிசாமி கூறினார், முழுமையான பதிலை அவர் இன்னும் தரவில்லை என்று கூறினார்.

இந்நிலையில் கருணாநிதி உடலை அடக்கம் செய்ய மெரினாவிற்கு பதில் வேறு இடம் தர அரசு தயார் என தலைமைச் செயலாளர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மெரினாவில் கருணாநிதிக்கு இடம் தர காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தி உள்ளார். இது குறித்த அவர் டுவிட்டர் பதிவில், ஜெயலலிதாவை போலவே, கருணாநிதியும் தமிழக மக்களின் குரலாக இருந்தார். அவருக்கு மெரினா கடற்கரையில் இடம் தர வேண்டும். தமிழ்நாட்டின் தற்போதைய தலைமை பெருந்தன்மையுடன் நடந்துகொள்ளும் என்று எதிர்பார்க்கிறேன் என  ராகுல் காந்தி தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.



தொடர்புடைய செய்திகள்

1. சென்னை-சேலம் இடையே 8 வழி சாலைக்கு எதிரான வழக்குகளின் தீர்ப்பு தள்ளிவைப்பு ஐகோர்ட்டு உத்தரவு
சென்னை-சேலம் இடையே 8 வழி பசுமைச்சாலை திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
2. சென்னை-செங்கல்பட்டு பிரிவில் மின்சார ரெயில்கள் தினமும் தாமதமாக வருவது ஏன்? அதிகாரி விளக்கம்
சென்னை-செங்கல்பட்டு பிரிவில் மின்சார ரெயில்கள் தினமும் 20 நிமிடம் வரை தாமதமாக வருவது ஏன்? என்பதற்கு ரெயில்வே அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.
3. சென்னையில் 13-ந் தேதி ஆர்ப்பாட்டம்: ‘பிளாஸ்டிக்’ தடையை நீக்க கோரி வழக்கு
‘பிளாஸ்டிக்’ தடையை நீக்கக்கோரி கோர்ட்டில் வழக்கு தொடரப்படும் என்றும், சென்னையில் 13-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
4. சென்னை ஆம்னி பஸ்சில் ரூ.62¼ லட்சம் பறிமுதல் ஒருவர் கைது
சென்னை ஆம்னி பஸ்சில் ரூ.62¼ லட்சத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.
5. சென்னை ஐ.ஐ.டி.யில் 28 சதவீத பேராசிரியர் பணியிடங்கள் காலி - மத்திய அரசு தகவல்
சென்னை ஐ.ஐ.டி.யில் 28 சதவீத பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.