மாநில செய்திகள்

கோபாலபுரம் வீட்டில் கருணாநிதியின் உடல்: மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அஞ்சலி + "||" + Karunanidhi's body in Gopalapuram house: West Bengal Chief Minister Mamata Banerjee Anjali

கோபாலபுரம் வீட்டில் கருணாநிதியின் உடல்: மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அஞ்சலி

கோபாலபுரம் வீட்டில் கருணாநிதியின் உடல்: மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அஞ்சலி
கோபாலபுரம் வீட்டில் கருணாநிதியின் உடலுக்கு மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அஞ்சலி செலுத்தினார். #Karunanidhi #RIP
சென்னை,

தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவால் சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். நேற்றிலிருந்து அவருடைய உடல்நிலையில் திடீர் பின்னடைவு ஏற்பட்டது. மருத்துவமனையும் உறுதிசெய்தது. கடந்த 11 நாட்களாக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த கருணாநிதி இன்று மாலை 6.10 மணியளவில் காலமானார்.


காவேரி மருத்துவமனையில் இருந்து இரவு 9.20 மணியளவில் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்,  கோபாலபுரம் இல்லத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டது. வழி நெடுக தொண்டர்கள் வெள்ளத்தில் மிதந்த படி கருணாநிதியின் உடல், ஆம்புலன்ஸ் மூலம் எடுத்துச்செல்லப்பட்டது. பின்னர் கோபாலபுரம் கொண்டு செல்லப்பட்ட கருணாநிதியின் பூத உடல் அங்கு குடும்பத்தினர் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்துவதற்காக மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி இன்று சென்னை வந்தார். பின்னர் கோபாலபுரம் வீட்டிற்கு விரைந்த அவர் மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.



தொடர்புடைய செய்திகள்

1. மூத்த பத்திரிகையாளர் நக்கீரன் கோபால் சென்னை விமான நிலையத்தில் கைது
மூத்த பத்திரிகையாளர் நக்கீரன் கோபால் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
2. சென்னையில் புரோ கபடி லீக்: தமிழ் தலைவாஸ் அணி தோல்வி
சென்னையில் நடந்த புரோ கபடி லீக் ஆட்டத்தில், தமிழ் தலைவாஸ் அணி தோல்வியடைந்தது.
3. சென்னையில் புரோ கபடி லீக்: வெற்றியுடன் தொடங்கியது தமிழ் தலைவாஸ்
சென்னையில் புரோ கபடி லீக் போட்டியில், பாட்னாவை வீழ்த்தி வெற்றியுடன் தொடங்கியது தமிழ் தலைவாஸ் அணி.
4. தோகாவில் இருந்து கடத்தல்: சென்னை விமான நிலையத்தில் 1½ கிலோ தங்கம் சிக்கியது
தோகாவில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 1½ கிலோ தங்க கட்டிகளை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வாலிபர் கைது செய்யப்பட்டார்.
5. சென்னை கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் மின்சார ரெயில் சேவைகளை குறைப்பதா? பயணிகள் ஆதங்கம்
சென்னை கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் மின்சார ரெயில் சேவைகளை குறைப்பதா? என்று பயணிகள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கின்றனர்.