மாநில செய்திகள்

திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் இரங்கல் + "||" + DMK leader Karunanidhi condemned the death of various political parties

திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் இரங்கல்

திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் இரங்கல்
திமுக தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் இரங்கல் தெரிவித்துள்ளனர். #Karunanidhi #RIPKarunanidhi
சென்னை,

தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவால் சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். நேற்று முன் தினம் முதல் அவருடைய உடல்நிலையில் திடீர் பின்னடைவு ஏற்பட்டது. கடந்த 11 நாட்களாக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த கருணாநிதி நேற்று மாலை 6.10 மணியளவில் காலமானார்.


இந்திய அரசியல் வரலாற்றில் மிகப்பெரும் ஆளுமைகளில் ஒருவரான கருணாநிதியின் மறைவுக்கு, ஜனாதிபதி, பிரதமர் மோடி, தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி உள்பட தேசிய தலைவர்கள், திரை ஆளுமைகள் என பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்தனர். காவேரி மருத்துவமனையில் இருந்து இரவு 9.20 மணியளவில் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்,  கோபாலபுரம் இல்லத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டு அங்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் கோபாலபுரத்திலிருந்து சிஐடி காலனி இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டு குடும்பத்தினர், பொதுமக்கள் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில் திமுக தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு பொன்.ராதாகிருஷ்ணன், ராமதாஸ், அன்புமணி, தினகரன், திருநாவுக்கரசர், விஜயகாந்த், பாலகிருஷ்ணன், தமிழிசை, ஈவிகேஎஸ்.இளங்கோவன், வாசன், காதர் மொகீதின் ஆகியோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மேலும் திமுக தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு மன்மோகன்சிங், அத்வானி, அமித்ஷா, ராகுல் காந்தி, சந்திரபாபு நாயுடு, நவீன் பட்னாவிக், சீதாராம் யெச்சூரி, குமாரசாமி, அரவிந்த் கெஜ்ரிவால், பரூக் அப்துல்லா, கேரள ஆளுநர் சதாசிவம், கிரண்பேடி, குலாம்நபி ஆசாத், ஆகியோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த பிரதமர் மோடி, ராகுல் காந்தி, நிர்மலா சீதாராமன், பொன்.ராதாகிருஷ்ணன், குமாரசாமி, அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர்  இன்று வர உள்ளனர்.


தொடர்புடைய செய்திகள்

1. பனி, புகை மூட்டத்தால் சென்னையில் விமான சேவை பாதிப்பு
கடுமையான பனி மற்றும் புகை மூட்டத்தால் சென்னையில் விமான சேவை இன்று காலை பாதிக்கப்பட்டுள்ளது.
2. சர்க்கரை அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 பொங்கல் பரிசு வழங்க சென்னை ஐகோர்ட் அனுமதி
சர்க்கரை அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 பொங்கல் பரிசு வழங்க சென்னை ஐகோர்ட் அனுமதி அளித்துள்ளது.
3. பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை
பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமும் செய்யப்படாமல் நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகின்றது.
4. சென்னை நகை வியாபாரி வீட்டில் 11 கிலோ தங்கம் கொள்ளையடித்த வேலைக்காரர் கைது ரெயிலில் தப்பிச்சென்றபோது ஆந்திராவில் பிடிபட்டார்
கொருக்குப்பேட்டையில் நகை வியாபாரி வீட்டில் 11 கிலோ தங்கம் கொள்ளையடித்த வழக்கில் அவரது வீட்டில் வேலை பார்த்து வந்த வாலிபர் ரெயிலில் தப்பிச்சென்றபோது ஆந்திராவில் பிடிபட்டார்.
5. சென்னை புறநகரில் கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டு வந்த பிரபல ரவுடி துப்பாக்கிமுனையில் கைது சொகுசு காரில் கூட்டாளிகளுடன் வந்தபோது சிக்கினார்
சென்னை புறநகர் பகுதியில் கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டு வந்த பிரபல ரவுடியை, சொகுசு காரில் கூட்டாளிகளுடன் வந்தபோது துப்பாக்கிமுனையில் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து சொகுசு கார், துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது.