மாநில செய்திகள்

தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவு; டி.டி.வி. தினகரன், நடிகர் ரஜினிகாந்த் அஞ்சலி செலுத்தினர் + "||" + DMK Leader Karunanidhi's death; Dinakaran, actor Rajinikanth paid tribute

தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவு; டி.டி.வி. தினகரன், நடிகர் ரஜினிகாந்த் அஞ்சலி செலுத்தினர்

தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவு; டி.டி.வி. தினகரன், நடிகர் ரஜினிகாந்த் அஞ்சலி செலுத்தினர்
தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவுக்கு டி.டி.வி. தினகரன், நடிகர் ரஜினிகாந்த் அஞ்சலி செலுத்தினர்.
சென்னை,

சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில் உள்ள ராஜாஜி அரங்கில் மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது.  அவரது உடல் மீது தேசிய கொடி போர்த்தப்பட்டு உள்ளது.  தொடர்ந்து ராணுவ மரியாதையும் வழங்கப்பட்டது.

அவரது உடல் வைக்கப்பட்டு உள்ள கண்ணாடி பேழை அருகே, தலைவர் கலைஞர் மறைந்தார் என்ற செய்தி இடம்பெற்ற இன்றைய முரசொலி நாளிதழ் வைக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், அவரது உடலுக்கு டி.டி.வி. தினகரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அஞ்சலி செலுத்தினர்.  அவர் செய்தியாளர்களின் கேள்வி ஒன்றிற்கு, அரசியல் பேச விரும்பவில்லை என கூறினார்.

அதனை தொடர்ந்து, நடிகர் ரஜினிகாந்த் தனது குடும்பத்தினருடன் வந்து அஞ்சலி செலுத்தினார்.  அவரது மனைவி லதா, மகள் சவுந்தர்யா, மருமகன் தனுஷ் ஆகியோரும் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

அதன்பின் மு.க. அழகிரி, மு.க. ஸ்டாலினுக்கு நடிகர் ரஜினிகாந்த் ஆறுதல் கூறினார்.

அதன்பின்னர் நடிகர்கள் ராதாரவி மற்றும் சிவகார்த்திகேயன் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர்.


தொடர்புடைய செய்திகள்

1. தமிழகம் மற்றும் தேசிய அளவில் அரசியல் உலகில் உயர்ந்த தலைவர்; சோனியா காந்தி இரங்கல் கடிதம்
தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவால் ஆழ்ந்த வருத்தமடைந்து உள்ளேன் என மு.க. ஸ்டாலினுக்கு எழுதிய இரங்கல் கடிதத்தில் சோனியா காந்தி தெரிவித்து உள்ளார்.
2. தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவு; ஆளுநர் பன்வாரிலால் அஞ்சலி
தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அஞ்சலி செலுத்தினார்.
3. மெரீனாவில் இடம் ஒதுக்க கோரி வழக்கு; தி.மு.க. தரப்பில் வாதம் தொடங்கியது
தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய மெரீனாவில் இடம் ஒதுக்க கோரிய வழக்கில் தி.மு.க. தரப்பில் வாதம் தொடங்கியது.
4. தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவு; தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கண்ணீர் மல்க வீடியோவில் இரங்கல்
தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவுக்கு தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கண்ணீர் மல்க வீடியோவில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
5. தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவு; தேசிய கொடி போர்த்தப்பட்டு ராணுவ மரியாதை அளிக்கப்பட்டது
மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல் மீது தேசிய கொடி போர்த்தப்பட்டு ராணுவ மரியாதை அளிக்கப்பட்டது.