மாநில செய்திகள்

தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவு; முதல் அமைச்சர் மற்றும் துணை முதல் அமைச்சர் அஞ்சலி + "||" + DMK Leader Karunanidhi's death; Chief Minister and Deputy Chief Minister paid tribute

தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவு; முதல் அமைச்சர் மற்றும் துணை முதல் அமைச்சர் அஞ்சலி

தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவு; முதல் அமைச்சர் மற்றும் துணை முதல் அமைச்சர் அஞ்சலி
தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவுக்கு முதல் அமைச்சர் பழனிசாமி, துணை முதல் அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் அஞ்சலி செலுத்தினர்.

சென்னை,

சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில் உள்ள ராஜாஜி அரங்கில் மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது.  அவரது உடல் மீது தேசிய கொடி போர்த்தப்பட்டு உள்ளது.  தொடர்ந்து ராணுவ மரியாதையும் வழங்கப்பட்டது.

தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு மரியாதை செலுத்தும் வகையில் தலைமை செயலகத்தில் அரைகம்பத்தில் தேசியக்கொடி பறக்க விடப்பட்டு உள்ளது.

அவரது உடல் வைக்கப்பட்டு உள்ள கண்ணாடி பேழை அருகே, தலைவர் கலைஞர் மறைந்தார் என்ற செய்தி இடம்பெற்ற இன்றைய முரசொலி நாளிதழ் வைக்கப்பட்டு உள்ளது.

நாளை மறுநாள் 77வது ஆண்டில் முரசொலி நாளிதழ் அடியெடுத்து வைக்க உள்ளது.  இந்த நிலையில், மறைந்த கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த தொண்டர்கள் மற்றும் மக்கள் குவிந்து உள்ளனர்.

இந்த நிலையில், முதல் அமைச்சர் பழனிசாமி, துணை முதல் அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் நேரில் வந்து மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தினர்.

அவர்களுடன் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, தமிழக சட்டமன்ற சபாநாயகர் தனபால், அமைச்சர்கள் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், ஜெயக்குமார், வேலுமணி, காமராஜ் ஆகியோரும் நேரில் அஞ்சலி செலுத்தினர்.தொடர்புடைய செய்திகள்

1. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக தேவையில்லை சேலத்தில் தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி
டெண்டர் முறைகேடு புகார் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளதால் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக தேவையில்லை என சேலத்தில் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
2. முதல்-அமைச்சர், அமைச்சர்களை பதவி நீக்கம் செய்யவேண்டும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
துணை வேந்தர்கள் நியமனத்தில் ஊழல் நடந்திருப்பதாக கவர்னர் குற்றம் சாட்டிய நிலையில் முதல்-அமைச்சர், அமைச்சர்களை உடனடியாக பதவி நீக்கம் செய்யவேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
3. முதல்-அமைச்சர் மாநில விளையாட்டு விருது பெற விண்ணப்பிக்கலாம் அதிகாரி தகவல்
முதல்-அமைச்சர் மாநில விளையாட்டு விருது பெற விண்ணப்பிக்கலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் சிவரஞ்சன் தெரிவித்துள்ளார்.
4. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு திருவள்ளூரில் வரவேற்பு பொதுமக்களிடம் குறை கேட்டார்
குடும்பத்துடன் திருப்பதி சென்ற முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு திருவள்ளூரில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது அவர் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
5. இந்தியாவிலேயே தமிழகத்தில் கல்வித்தரம் உயர்ந்துள்ளது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேச்சு
இந்தியாவிலேயே தமிழகத்தில் கல்வித்தரம் உயர்ந்துள்ளது. தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளிலும் வசதிகள் உள்ளது என்று சேலத்தில் நடந்த விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.