மாநில செய்திகள்

கருணாநிதிக்கு மெரினாவில் இடம்கோரிய திமுகவின் மனு கோர்ட்டில் அனல்பறக்கும் வாதங்கள் விவரம் + "||" + Karunanidhi's petition to the DMK in Marina Definition of arguments in the court

கருணாநிதிக்கு மெரினாவில் இடம்கோரிய திமுகவின் மனு கோர்ட்டில் அனல்பறக்கும் வாதங்கள் விவரம்

கருணாநிதிக்கு மெரினாவில் இடம்கோரிய திமுகவின் மனு கோர்ட்டில் அனல்பறக்கும் வாதங்கள் விவரம்
கருணாநிதிக்கு மெரினாவில் இடம்கோரிய திமுகவின் மனு கோர்ட்டில் அனல்பறக்கும் வாதங்கள் நீதிமன்றத்தில் சலசலப்பு ஏற்பட்டது. #RIPKarunanidhi #KarunanidhiDeath
சென்னை

இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், தமிழக முன்னாள் முதல்-அமைச்சரும், திமுக தலைவருமான கருணாநிதி உடல் நலக்குறைவால் நேற்று மாலை காலமானார். அவருக்கு வயது 95.

இந்நிலையில் திமுக தலைவர் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய மெரினாவில் இடம் ஒதுக்க வேண்டும் என அக்கட்சி சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.  இதுபற்றிய திமுகவின் மனு மீது நேற்று இரவு சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி குலுவாடி ரமேஷின் வீட்டில் வைத்து விசாரணை நடைபெற்றது.

இந்த மனு மீது பதிலளிக்கும்படி இன்று காலை 8 மணிக்கு தமிழக அரசு, சென்னை மாநகராட்சி பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில் தி.மு.க. தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதம் தொடங்கியது,

காந்தி மண்டபம் அருகே திமுக தலைவர் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்வதை மரியாதைக்குரியதாக கருத முடியாது சட்டத்திற்கு உட்படாத காரணங்களைக் கூறி தமிழக அரசு அனுமதி மறுக்கிறது.

எனது வாழ்வும், ஆன்மாவும் கருணாநிதிதான் என அண்ணாவே  கூறியிருக்கிறார். மெரினாவில் திமுக தலைவர் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய அனுமதிக்காவிடில் மக்களின் மனம் புண்படும்.

எம்.ஜி.ஆர் இறந்தபோது அண்ணா சமாதி அருகில் இடம் ஒதுக்கப்பட்டது, அதேபோல தான் ஜெயலலிதாவும் அடக்கம் செய்யப்பட்டார் .  13 முறை எம்எல்ஏவாக இருந்த கருணாநிதிக்கு, மெரினாவில் இடம் ஒதுக்காவிட்டால் தொண்டர்கள் உணர்வுகளை புண்படுத்தும். காமராஜர், ராஜாஜி ஆகியோர் கொள்கைக்கும், திராவிட இயக்க தலைவர்கள் கொள்கைகளுக்கும் வித்தியாசம் உள்ளது. காமராஜரை காங்கிரஸ் அலுவலகத்தில் தான் அடக்கம் செய்ய முடிவெடுத்தார்கள்.  1988 அரசு உத்தரவுபடி ஏற்கனவே மெரினாவை மயானமாகவும், நினைவிடமாகவும் அறிவித்துள்ளது சென்னை மாநகராட்சி. அந்த பகுதியில் கருணாநிதி உடலை அடக்கம் செய்ய கோருகிறோம்.

ஜெயலலிதா உடலை அடக்கம் செய்யும்போது எந்த சட்ட சிக்கலும் இல்லை என அரசு கூறியது. தற்போது சட்ட சிக்கல் இருப்பதாக கூறும் அரசு, அவை என்ன என கூறவில்லை. அண்ணா சமாதி வளாகத்தில் உடலை அடக்கம் செய்ய மட்டுமே அனுமதி கோருகிறோம். மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நிலத்தை ஒதுக்க மத்திய அரசின் அனுமதி தேவையில்லை. கருணநிதி கருத்து எதிராக மனுதாக்கல் செய்வது  அவருக்கு அவமரியாதையாகும் என வாதாடினார்.

அரசு தரப்பு வழக்கறிஞர் வாதாடும் போது:-

ஜானகி இறந்தபோது எம்.ஜி.ஆர். சமாதி அருகில் இடமளிக்க முடியாது என கருணாநிதி எழுதிய உத்தரவு உள்ளது என நகலை தாக்கல் செய்தார். "முந்தைய கால நிகழ்வுகளின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது" திமுக தலைவர் கருணாநிதியை காந்திமண்டபம் பகுதியில் அடக்கம் செய்வது வேண்டாம் என்பதன் மூலம் காந்தி, காமராஜர், பக்தவசலம் போன்றோரை அவமதிப்பதற்கு சமம். கண்ணியமற்ற என்ற வார்த்தை தலைவர்களை  அவமதிப்பதாகும். திமுக தலைவர் கருணாநிதியின் உடலை காந்தி மண்டபம் அருகே 2 ஏக்கர் நிலத்தில் அடக்கம் செய்வது மரியாதைக்குரியது இல்லையா? அடக்கம் செய்ய நிலம் ஒதுக்க கோரும் உரிமை யாருக்கும் இல்லை.  

அரசு பாகுபாடு காட்டுகிறது என்ற புகாருக்கு முகாந்திரமில்லை. மெரினாவில் இடமளிக்க மறுப்பது சட்டப்பிரிவு 14ஐ எப்படி மீறுவதாகும்
அடக்கம் செய்ய மெரினாவில் இடம் ஒதுக்க வேண்டும் என கோருவதற்கு யாருக்கும் உரிமையில்லை.

"மெரினாவில் நினைவிடம் கட்ட எதிர்ப்பு தெரிவித்த வழக்குகள் வாபஸ் பெற்ற பின் சட்ட சிக்கல் என்ன உள்ளது?" என நீதிபதி கேட்டனர்.