மாநில செய்திகள்

கருணாநிதி உடல் அடக்கம் மெரினா வழக்கு: மேல் முறையீடு செய்ய வேண்டாம் என தமிழக அரசு முடிவு + "||" + Karunanidhi's body buried Marina Case: Do not make appeal The Tamil Nadu government concluded

கருணாநிதி உடல் அடக்கம் மெரினா வழக்கு: மேல் முறையீடு செய்ய வேண்டாம் என தமிழக அரசு முடிவு

கருணாநிதி உடல் அடக்கம் மெரினா வழக்கு: மேல் முறையீடு செய்ய வேண்டாம் என தமிழக அரசு முடிவு
கருணாநிதி உடல் அடக்கம் தொடர்பான மெரினா வழக்கில் மேல் முறையீடு செய்ய வேண்டாம் என தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
சென்னை

இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், தமிழக முன்னாள் முதல்-அமைச்சரும், திமுக தலைவருமான கருணாநிதி உடல் நல குறைவால் நேற்று மாலை காலமானார். அவருக்கு வயது 95.

இந்நிலையில் திமுக தலைவர் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய மெரினாவில் இடம் ஒதுக்க வேண்டும் என அக்கட்சி சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.  இதுபற்றிய திமுகவின் மனு மீது நேற்று இரவு சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி குலுவாடி ரமேஷின் வீட்டில் வைத்து விசாரணை நடைபெற்றது.

இந்த மனு மீது பதிலளிக்கும்படி இன்று காலை 8 மணிக்கு தமிழக அரசு, சென்னை மாநகராட்சி பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில் தி.மு.க. தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதம் தொடங்கியது. இரு தரப்பினரும் அனல் பறக்கும் வாதத்தில் ஈடுபட்டனர். இரு தரப்பு வாதமும் நிறைவடைந்ததும் நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர்.

கருணாநிதி உடலை மெரினாவில் அடக்கம் செய்ய அனுமதி அளித்து சென்னை ஐகோர்ட் பொறுப்பு தலைமை நீதிபதி குலுவாடி ரமேஷ், சுந்தர் அமர்வு தீர்ப்பு  வழங்கியது.

இதை தொடர்ந்து சென்னை ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல் முறையீடு செய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல் முறையீடு செய்யப்போவது இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.

மெரினா கடற்கரையில் திமுக தலைவர் கருணாநிதியின் உடல் அடக்கம் செய்யப்பட உள்ள இடத்தை தூய்மைபடுத்தும் பணிகள் மற்றும் தோண்டும் பணிகள் தொடங்கியது.


தொடர்புடைய செய்திகள்

1. இன்று பிற்பகல் மு.க.ஸ்டாலின் வீடு திரும்புவார் - அப்போலோ மருத்துவமனை
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வலதுபக்க கால் தொடையில் சிறிய அளவில் அறுவை சிகிச்சை. இன்று பிற்பகல் மு.க.ஸ்டாலின் வீடு திரும்புவார்.
2. பேரணிக்கு எந்த நோக்கமும் இல்லை ; கருணாநிதி இறந்த 30-ம் நாளில் அஞ்சலி செலுத்தவே பேரணி-மு.க.அழகிரி
பேரணிக்கு எந்த நோக்கமும் இல்லை ; கருணாநிதி இறந்த 30-ம் நாளில் அஞ்சலி செலுத்தவே பேரணி என நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பின் பேட்டி அளித்த மு.க.அழகிரி கூறினார். #MKAlagiri
3. எதிர்பார்த்ததை விட அதிக தொண்டர்கள், மு.க. அழகிரி தலைமையிலான அமைதி பேரணி வெற்றி-துரை தயாநிதி
எதிர்பார்த்ததை விட அதிக தொண்டர்கள் மு.க. அழகிரி தலைமையிலான அமைதி பேரணி வெற்றியடைந்து உள்ளது என அழகிரி மகன் துரை தயாநிதி கூறி உள்ளார். #MKAlagiri
4. புகழஞ்சலி கூட்டம்: கருணாநிதியை தவிர்த்துவிட்டு, திராவிட வரலாற்றை யாரும் எழுத முடியாது-துரைமுருகன்
கருணாநிதி புகழஞ்சலி கூட்டத்தில் கருணாநிதியை தவிர்த்துவிட்டு, திராவிட வரலாற்றை யாரும் எழுத முடியாது என தி.மு.க பொருளாளர் துரைமுருகன் பேசினார்.
5. திமுக தலைவர் கருணாநிதி தனிமனிதர் அல்ல திராவிட இயக்கத்தின் மூன்றாவது அத்தியாயம்-கீ.விரமணி
திமுக தலைவர் கருணாநிதி தனிமனிதர் அல்ல திராவிட இயக்கத்தின் மூன்றாவது அத்தியாயம் என கீ.விரமணி கூறி உள்ளார்.