தேசிய செய்திகள்

கருணாநிதி கோடானு கோடி மக்களின் எண்ணங்களிலும் இதயத்திலும் அவர் வாழ்வார் -மோடி டுவிட் + "||" + Karunanidhi Godan Codyeople's thoughts and heart   Will live Modi tweeted

கருணாநிதி கோடானு கோடி மக்களின் எண்ணங்களிலும் இதயத்திலும் அவர் வாழ்வார் -மோடி டுவிட்

கருணாநிதி கோடானு கோடி மக்களின் எண்ணங்களிலும் இதயத்திலும் அவர் வாழ்வார் -மோடி டுவிட்
கலைஞர் கருணாநிதியால் தங்கள் வாழ்க்கையில் மாற்றம் கண்ட கோடானு கோடி மக்களின் எண்ணங்களிலும் இதயத்திலும் அவர் வாழ்வார் என பிரதமர் கூறி உள்ளார்.
சென்னை

சென்னை ராஜாஜி ஹாலில் அவைக்கபட்டு உள்ள தி.மு.க தலைவர்  கருணாநிதி உடலுக்கு  அரசியல் பிரமுகர்களும், திரை உலக பிரபலங்களும் வந்து அஞ்சலி செலுத்தி செல்கின்றனர். பிரதமர்  மோடி சென்னை வந்து  கருணாநிதி உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். பின்னர் ராஜாத்தி அம்மாள், மு.க.ஸ்டாலின் ,கனிமொழி  உள்பட அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். 

இது குறித்த புகைபடத்தை டுவிட்டரில் வெளியிட்டு தன்னிகரற்ற தலைவரும், பழுத்த நிர்வாகியும், மக்கள் நலனுக்காகவும் சமூக நீதிக்காகவும் தன் வாழ்நாளை அர்ப்பணித்த தலைவருக்கு சென்னையில் அஞ்சலி செலுத்தினேன். கலைஞர் கருணாநிதியால் தங்கள் வாழ்க்கையில் மாற்றம் கண்ட கோடானு கோடி மக்களின் எண்ணங்களிலும் இதயத்திலும் அவர் வாழ்வார்  என பிரதமர் கூறி உள்ளார்.
தொடர்புடைய செய்திகள்

1. பிரதமர் மோடி, இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் கோலி இருவரையும் எளிதில் வீழ்த்த முடியாது; அருண் ஜெட்லி
பிரதமர் மோடி, இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கோலி இருவரையும் எளிதில் வீழ்த்த முடியாது என அருண் ஜெட்லி கூறியுள்ளார்.
2. 99 சதவீத பொருட்களை 18 சதவீத ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வர நடவடிக்கை பிரதமர் மோடி உறுதி
சாதாரண மக்கள் பயன்படுத்தும் 99 சதவீத பொருட்களை 18 சதவீத ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படுகிறது என பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.
3. சீக்கிய கலவரம்: காங்கிரஸ் தலைவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்று யாரும் நினைத்து பார்த்திருக்க மாட்டார்கள் - பிரதமர் மோடி
1984 ஆம் ஆண்டு நடந்த சீக்கிய கலவரம் தொடர்பாக காங்கிரஸ் தலைவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்று யாரும் நினைத்து பார்த்திருக்க மாட்டார்கள் என பிரதமர் மோடி கூறி உள்ளார்.
4. பிரதமர் மோடி இன்று மும்பை வருகை ரூ.41 ஆயிரம் கோடி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்
பிரதமர் மோடி இன்று மும்பை வருகிறார். அவர் ரூ.41 ஆயிரம் கோடி திட்டங்களுக்கு அடிக்கல் வைக்கிறார்.
5. ராஜஸ்தான் மாநில முதல் மந்திரி அசோக் கெலாட்டிற்கு பிரதமர் மோடி வாழ்த்து
ராஜஸ்தான் மாநில முதல் மந்திரி அசோக் கெலாட்டிற்கு பிரதமர் மோடி வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளார்.