மாநில செய்திகள்

கருணாநிதி உடலை காண தொண்டர்கள் முண்டியடித்ததால் தள்ளுமுள்ளு அதிரடிப் படையினர் ஒழுங்குபடுத்துகின்றனர் + "||" + Find Karunanidhi's body The volunteers fell Scuffle

கருணாநிதி உடலை காண தொண்டர்கள் முண்டியடித்ததால் தள்ளுமுள்ளு அதிரடிப் படையினர் ஒழுங்குபடுத்துகின்றனர்

கருணாநிதி உடலை காண தொண்டர்கள் முண்டியடித்ததால்  தள்ளுமுள்ளு அதிரடிப் படையினர் ஒழுங்குபடுத்துகின்றனர்
கருணாநிதி உடலை காண ஆயிரகணக்கான தொண்டர்கள் முண்டியடித்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது அதிரடிப் படையினர் ஒழுங்குபடுத்துகின்றனர்.
சென்னை,

தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவால் சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். நேற்று முன் தினம் முதல் அவருடைய உடல்நிலையில் திடீர் பின்னடைவு ஏற்பட்டது. கடந்த 11 நாட்களாக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த கருணாநிதி நேற்று மாலை 6.10 மணியளவில் காலமானார். 

இந்திய அரசியல் வரலாற்றில் மிகப்பெரும் ஆளுமைகளில் ஒருவரான கருணாநிதியின் மறைவுக்கு, ஜனாதிபதி, பிரதமர் மோடி, தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி உள்பட தேசிய தலைவர்கள், திரை ஆளுமைகள் என பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்தனர். காவேரி மருத்துவமனையில் இருந்து இரவு 9.20 மணியளவில் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்,  கோபாலபுரம் இல்லத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டது. 

பின்னர் கோபாலபுரம் கொண்டு செல்லப்பட்ட கருணாநிதியின் பூத உடல் அங்கு அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. கோபாலபுரம் இல்லத்தில் திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு கழக பொதுச்செயலாளர் க.அன்பழகன், திருமாவளவன், முத்தரசன், திருநாவுக்கரசர் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். பின்னர் கோபாலபுரம் வீட்டில் கருணாநிதியின் உடலுக்கு மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அஞ்சலி செலுத்தினார். மேலும் கருணாநிதியின் உடலுக்கு குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் கோபாலபுரம் இல்லத்தில் இருந்து கருணாநிதியின் பூத உடல் சிஐடி காலனிக்கு கொண்டு வரப்பட்டது.  அங்கு அவரது குடும்பத்தினர் இறுதி மரியாதை செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அங்கு பொதுமக்களும், தொண்டர்களும் அதிக அளவில் திரண்டிருந்தனர். பின்னர் கருணாநிதியின் பூத உடல் சிஐடி காலனியில் இருந்து ஒமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் உள்ள ராஜாஜி அரங்கத்திற்கு கொண்டு வரப்பட்டது. கழக உடன்பிறப்புகளும், பொதுமக்களுக்கும் அரசியல் கட்சி தலைவர்களுக்கும் இறுதி வணக்கம் செலுத்துவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இங்கு பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் அதிக அளவில் வருகை தருவார்கள் என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

தற்போது திமுக தலைவர் கருணாநிதியின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டுள்ளது.திமுக தலைவர் கருணாநிதி உடலுக்கு தேசியக் கொடி போர்த்தி ராணுவ மரியாதை செலுத்தப்பட்டது. 

திமுக தலைவர் கருணாநிதிக உடலுக்கு அரசியல் பிரமுகர்களும், திரை உலக பிரபலங்களும் வந்து அஞ்சலி செலுத்தி செல்கின்றனர். பிரதமொ மோடி வந்து  கருணாநிதி உடலுக்கு அஞ்சலி செலுத்தி அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். 

ராஜாஜி அரங்கில் உள்ள கருணாநிதி உடலை தொண்டர்கள் முண்டியடித்துக் கொண்டு பார்க்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால்
போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.கலைஞர் உடல் உள்ள இடத்தில் கட்டுப்படுத்த முடியாத அளவு தொண்டர் கூட்டம், தொண்டர் கூட்டத்தை அதிரடிப் படையினர் ஒழுங்குபடுத்துகின்றனர்.

கருணாநிதி உடலை காண நூற்றுக்கணக்கான தொண்டர்கள் முண்டியடித்துக்கொண்டு குழுமியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கூட்ட நெரிசல் காரணமாக உடல் அரங்கத்திற்குள் கொண்டு செல்லப்பட்டது.

கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்துவதற்காக திமுக தலைவர்களும், தொண்டர்களும் அலை அலையாக வந்த வண்ணம் இருந்தனர். அவர்கள் அண்ணாசாலை வழியாக ராஜாஜி அரங்கிற்கு சென்று அஞ்சலி செலுத்திவிட்டு சிவானந்த சாலை வழியாக வெளியேற ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.

4 பாதைகளில் மக்கள் உள்ளே வரவும், வெளியே செல்லவும் வழிகள் உருவாக்கப்பட்டுள்ளன. அந்த 4 பாதைகளிலும் மக்கள் வெள்ளம் போல் காட்சி அளித்தனர். வாலாஜா சாலை, சிவானந்த சாலை, அண்ணா சாலை ஆகிய 3 சாலைகளிலும் எங்கு திரும்பினாலும் மக்கள் தலைகளாக காட்சி அளித்தது. லட்சக்கணக்கான மக்கள் திரண்டு வந்து தங்கள் தலைவனுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி சென்றனர்.



தொடர்புடைய செய்திகள்

1. இன்று பிற்பகல் மு.க.ஸ்டாலின் வீடு திரும்புவார் - அப்போலோ மருத்துவமனை
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வலதுபக்க கால் தொடையில் சிறிய அளவில் அறுவை சிகிச்சை. இன்று பிற்பகல் மு.க.ஸ்டாலின் வீடு திரும்புவார்.
2. பேரணிக்கு எந்த நோக்கமும் இல்லை ; கருணாநிதி இறந்த 30-ம் நாளில் அஞ்சலி செலுத்தவே பேரணி-மு.க.அழகிரி
பேரணிக்கு எந்த நோக்கமும் இல்லை ; கருணாநிதி இறந்த 30-ம் நாளில் அஞ்சலி செலுத்தவே பேரணி என நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பின் பேட்டி அளித்த மு.க.அழகிரி கூறினார். #MKAlagiri
3. எதிர்பார்த்ததை விட அதிக தொண்டர்கள், மு.க. அழகிரி தலைமையிலான அமைதி பேரணி வெற்றி-துரை தயாநிதி
எதிர்பார்த்ததை விட அதிக தொண்டர்கள் மு.க. அழகிரி தலைமையிலான அமைதி பேரணி வெற்றியடைந்து உள்ளது என அழகிரி மகன் துரை தயாநிதி கூறி உள்ளார். #MKAlagiri
4. புகழஞ்சலி கூட்டம்: கருணாநிதியை தவிர்த்துவிட்டு, திராவிட வரலாற்றை யாரும் எழுத முடியாது-துரைமுருகன்
கருணாநிதி புகழஞ்சலி கூட்டத்தில் கருணாநிதியை தவிர்த்துவிட்டு, திராவிட வரலாற்றை யாரும் எழுத முடியாது என தி.மு.க பொருளாளர் துரைமுருகன் பேசினார்.
5. திமுக தலைவர் கருணாநிதி தனிமனிதர் அல்ல திராவிட இயக்கத்தின் மூன்றாவது அத்தியாயம்-கீ.விரமணி
திமுக தலைவர் கருணாநிதி தனிமனிதர் அல்ல திராவிட இயக்கத்தின் மூன்றாவது அத்தியாயம் என கீ.விரமணி கூறி உள்ளார்.