மாநில செய்திகள்

கருணாநிதியின் இறுதி ஊர்வலம் அமைதியான முறையில் நடக்க தொண்டர்கள் கலைந்து செல்லுங்கள் -மு.க.ஸ்டாலின் + "||" + Karunanidhi's final rally Walk in peaceful manner Volunteers disperse MK Stalin

கருணாநிதியின் இறுதி ஊர்வலம் அமைதியான முறையில் நடக்க தொண்டர்கள் கலைந்து செல்லுங்கள் -மு.க.ஸ்டாலின்

கருணாநிதியின் இறுதி ஊர்வலம் அமைதியான முறையில் நடக்க தொண்டர்கள் கலைந்து செல்லுங்கள் -மு.க.ஸ்டாலின்
தொண்டர்கள் கலைந்து சென்றால்தான் கருணாநிதியின் இறுதி ஊர்வலம் அமைதியான முறையில் நடக்கும் என மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை

ராஜாஜி அரங்கில் உள்ள கருணாநிதி உடலை  தொண்டர்கள் முண்டியடித்துக் கொண்டு பார்க்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் 
போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். 

கலைஞர் உடல் உள்ள இடத்தில் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு தொண்டர் கூட்டம் கூடியது. தொண்டர் கூட்டத்தை அதிரடிப் படையினர் ஒழுங்குபடுத்துகின்றனர்.

கருணாநிதி உடலை காண நூற்றுக்கணக்கான தொண்டர்கள் முண்டியடித்துக்கொண்டு குழுமியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கூட்ட நெரிசல் காரணமாக உடல் அரங்கத்திற்குள் கொண்டு செல்லப்பட்டது.

கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்துவதற்காக திமுக தலைவர்களும், தொண்டர்களும் அலை அலையாக வந்த வண்ணம் இருந்தனர். அவர்கள் அண்ணாசாலை வழியாக ராஜாஜி அரங்கிற்கு சென்று அஞ்சலி செலுத்திவிட்டு சிவானந்தா சாலை வழியாக வெளியேற ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.

4 பாதைகளில் மக்கள் உள்ளே வரவும், வெளியே செல்லவும் வழிகள் உருவாக்கப்பட்டுள்ளன. அந்த 4 பாதைகளிலும் மக்கள் வெள்ளம் போல் காட்சி அளித்தனர். வாலாஜா சாலை, சிவானந்த சாலை, அண்ணா சாலை ஆகிய 3 சாலைகளிலும் எங்கு திரும்பினாலும் மக்கள் தலைகளாக காட்சி அளித்தது. லட்சக்கணக்கான மக்கள் திரண்டு வந்து தங்கள் தலைவனுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி சென்றனர்.

கூட்டம் கட்டுக்கடங்காமல் போகவே தொண்டர்களிடையே தி.மு.க செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் பேசினார். அவர் கூறியதாவது:-

தி.மு.க தொண்டர்கள் அமைதி காக்க வேண்டும். முதல் அமைச்சரை சந்தித்து மெரினாவில் இடம் ஒதுக்க கோரியும் செவிசாய்க்கவில்லை.  அரசு மறுத்த போதும் உயர் நீதிமன்ற  தீர்ப்பு அதை தவிடு பொடியாக்கி உள்ளது.  தொண்டர்கள்  கலைந்து சென்றால்தான்  திட்டமிட்டபடி தலைவர் கருணாநிதி இறுதி ஊர்வலம்  நடக்கும்.  இட ஒதுக்கீட்டுக்கு போராடிய கருணாநிதி  மறைந்த பிறகும் இட ஒதுகீட்டில் வெற்றி பெற்று உள்ளார்.

உங்கள் சகோதரனாக உங்கள் கால்களை தொட்டு கேட்கிறேன். கலைந்து செல்லுங்கள். தொண்டர்கள் கலைந்து சென்றால்தான் திமுக தலைவர்  கருணாநிதியின் இறுதி ஊர்வலம் அமைதியான முறையில் நடக்கும் என கேட்டு கொண்டார்.