மாநில செய்திகள்

ராஜாஜி அரங்கத்தில் இருந்து திமுக தலைவர் கருணாநிதியின் இறுதி ஊர்வலம் புறப்பட ஏற்பாடுகள் தீவிரம் + "||" + DMK leader Karunanidhi's funeral is to leave Serious preparations

ராஜாஜி அரங்கத்தில் இருந்து திமுக தலைவர் கருணாநிதியின் இறுதி ஊர்வலம் புறப்பட ஏற்பாடுகள் தீவிரம்

ராஜாஜி அரங்கத்தில் இருந்து திமுக தலைவர் கருணாநிதியின் இறுதி ஊர்வலம் புறப்பட ஏற்பாடுகள் தீவிரம்
ராஜாஜி அரங்கத்தில் இருந்து திமுக தலைவர் கருணாநிதியின் இறுதி ஊர்வலம் புறப்பட ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெறுகிறது.
சென்னை

இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், தமிழக முன்னாள் முதல்-அமைச்சரும், திமுக தலைவருமான கருணாநிதி உடல் நல குறைவால் நேற்று மாலை காலமானார். அவருக்கு வயது 95.

திமுக தலைவர் கருணாநிதியின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டுள்ளது. திமுக தலைவர் கருணாநிதி உடலுக்கு தேசியக்கொடி போர்த்தி ராணுவ மரியாதை செலுத்தப்பட்டது. 

திமுக தலைவர் கருணாநிதி உடலுக்கு அகில இந்திய அரசியல் தலைவர்களும், அரசியல்  பிரமுகர்களும், திரை உலக பிரபலங்களும் வந்து அஞ்சலி செலுத்தி செல்கின்றனர். 

ராஜாஜி ஹாலில் இருந்து  இறுதி ஊர்வலம் இன்று மாலை தொடங்கும் என தி.மு.க கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.  

திமுக தலைவர் கருணாநிதி உடலை ஊர்வலமாக கொண்டு செல்ல ராணுவ வாகனம் ராஜாஜி அரங்கத்துக்கு வருகை தந்துள்ளது. ராஜாஜி ஹாலில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து டிஜிபி டி.கே.ராஜேந்திரன் நேரில் ஆய்வு செய்தார்.



திமுக தலைவர் கருணாநிதிக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்கான நேரம் முடிவடைந்தது.

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின்  உடலை ராஜாஜி அரங்கத்தில் இருந்து அண்ணா நினைவிடம் கொண்டு செல்ல ஏற்பாடுகள் தீவிரம் காட்டப்படுகிறது.


தொடர்புடைய செய்திகள்

1. கஜா புயல் பாதிப்பை அரசியலாக்குவதாக கூறுவது தவறான குற்றச்சாட்டு - மு.க. ஸ்டாலின்
கஜா புயல் பாதிப்பை அரசியலாக்குவதாக கூறுவது தவறான குற்றச்சாட்டு. திமுக இதில் அரசியல் செய்யவில்லை என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
2. புயல் நிவாரண பணிகளுக்காக தி.மு.க அறக்கட்டளை சார்பில் ரூ. 1 கோடி நிதி தி.மு.க அறிவிப்பு
புயல் நிவாரண பணிகளுக்காக தி.மு.க அறக்கட்டளை சார்பில் ரூ. 1 கோடி நிதி ,எம்.பி- எம்.எல்.ஏ.களின் ஒருமாத சம்பளமும் வழங்கப்படும் என கூறப்பட்டு உள்ளது.
3. இன்று பிற்பகல் மு.க.ஸ்டாலின் வீடு திரும்புவார் - அப்போலோ மருத்துவமனை
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வலதுபக்க கால் தொடையில் சிறிய அளவில் அறுவை சிகிச்சை. இன்று பிற்பகல் மு.க.ஸ்டாலின் வீடு திரும்புவார்.
4. பேரணிக்கு எந்த நோக்கமும் இல்லை ; கருணாநிதி இறந்த 30-ம் நாளில் அஞ்சலி செலுத்தவே பேரணி-மு.க.அழகிரி
பேரணிக்கு எந்த நோக்கமும் இல்லை ; கருணாநிதி இறந்த 30-ம் நாளில் அஞ்சலி செலுத்தவே பேரணி என நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பின் பேட்டி அளித்த மு.க.அழகிரி கூறினார். #MKAlagiri
5. எதிர்பார்த்ததை விட அதிக தொண்டர்கள், மு.க. அழகிரி தலைமையிலான அமைதி பேரணி வெற்றி-துரை தயாநிதி
எதிர்பார்த்ததை விட அதிக தொண்டர்கள் மு.க. அழகிரி தலைமையிலான அமைதி பேரணி வெற்றியடைந்து உள்ளது என அழகிரி மகன் துரை தயாநிதி கூறி உள்ளார். #MKAlagiri