மாநில செய்திகள்

உடன் பிறப்புகளின் கண்ணீரில் மிதந்தபடி, அண்ணாவின் நிழல் தேடிச்செல்கிறது ஓய்வறியாச் ‘சூரியன்’ + "||" + Chennai: Mortal remains of DMK Chief M #Karunanidhi being taken to #MarinaBeach for last rites.

உடன் பிறப்புகளின் கண்ணீரில் மிதந்தபடி, அண்ணாவின் நிழல் தேடிச்செல்கிறது ஓய்வறியாச் ‘சூரியன்’

உடன் பிறப்புகளின் கண்ணீரில் மிதந்தபடி, அண்ணாவின் நிழல் தேடிச்செல்கிறது ஓய்வறியாச் ‘சூரியன்’
மக்கள் மற்றும் தொண்டர்களின் கண்ணீர்க்கடலில் மிதந்தபடி கருணாநிதியின் உடல் ராணுவ வாகனத்தில் மெரினா கொண்டு செல்லப்படுகிறது. #Karunanidhi #MarinaBeach
சென்னை,

திமுக தலைவர் கருணாநிதியின் இறுதி ஊர்வலம் தொடங்கி நடைபெற்று வருகிறது. மலர்களால் அலங்கரிக்கப்பட ராணுவ வாகனத்தில் அண்ணா சாலை, அண்ணா சாலை, வாலாஜா சாலை வழியாக  மெரினாவுக்கு  கருணாநிதியின் உடல்  ஊர்வலமாக எடுத்து செல்லப்படுகிறது. 

இந்தியாவின் 14 பிரதமர்களுடனும் அரசியல் பயணம் செய்த கருணாநிதியின் இறுதி பயணம் மக்கள் கடலுக்கு இடையே, வங்கக் கடல் நோக்கி சென்றது. சாலையின் இருபுறங்களிலும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் திரண்டு நின்று கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். 

இதனால், எழிலகம் முதல் நேப்பியர் பாலம் வரை உள்ள காமராஜர் சாலையில் அலை கடல் என வழி எங்கும் வாழ்த்து முழக்கங்களுடன் மக்கள் கூட்டம் நிரம்பி உள்ளது. பாதுகாப்புக்காக சாலையில் இரு புறங்களிலும் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.


தொடர்புடைய செய்திகள்

1. கருணாநிதி பெயரில் இருக்கை அமைக்க புதுவை பல்கலைக்கழகம் ஒப்புதல்
கருணாநிதி பெயரில் இருக்கை அமைக்க புதுவை பல்கலைக்கழகம் ஒப்புதல் அளித்துள்ளதாக முதல்–அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
2. கருணாநிதிக்கு இடமில்லை என்றவர்களின் ஆட்சியை விரட்டியடிப்போம் - ஆர்.எஸ்.பாரதி எம்.பி.
கருணாநிதி இறந்த பிறகு அவருக்கு இடமில்லை என்றவர்களின் ஆட்சியை விரட்டியடிப்போம் எனபேரூரில் நடந்த தி.மு.க. பொதுக்கூட்டத்தில் ஆர்.எஸ்.பாரதி பேசினார்.
3. ஜூன் 3–ந்தேதி கருணாநிதியின் பிறந்த நாள் தமிழ் செம்மொழி நாளாக கடைப்பிடிக்கப்படும் - மு.க.ஸ்டாலின்
கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் 3–ந்தேதி தமிழ் செம்மொழி நாளாக கடைப்பிடிக்கப்படும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துளார்.
4. மதுரையில் அண்ணா பஸ் நிலையம் அருகே கருணாநிதிக்கு சிலை - மு.க.அழகிரி
தி.மு.க. தலைவர் கருணாநிதியின் சிலையை மதுரையில் அமைக்க வேண்டும் என கலெக்டர், மாநகராட்சி ஆணையாளரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளதாக மு.க.அழகிரி கூறியுள்ளார்.
5. ராஜீவ்காந்தி சிலை முதல் இந்திராகாந்தி சிலை வரை உள்ள சாலைக்கு கருணாநிதியின் பெயர் சூட்டப்படும் - நாராயணசாமி
ராஜீவ்காந்தி சிலை முதல் இந்திராகாந்தி சிலை வரை உள்ள சாலைக்கு கருணாநிதியின் பெயர் சூட்டப்படும் என்று முதல்–அமைச்சர் நாராயணசாமி கூறினார்.