மாநில செய்திகள்

ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான்’ - சந்தனபெட்டியின் மீது வாசகம் + "||" + Karunanidhi’s epitaph finds place on casket

ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான்’ - சந்தனபெட்டியின் மீது வாசகம்

ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான்’ - சந்தனபெட்டியின் மீது வாசகம்
ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான்’ என கருணாநிதி உடல் வைக்கப்பட்ட சந்தனபெட்டியின் மீது வாசகம் எழுதப்பட்டுள்ளது. #MarinaBeach #Karunanidhi #KarunanidhiRIP
சென்னை, 

5 முறை தமிழக முதல் அமைச்சராகவும் 50 ஆண்டு காலம் திமுக தலைவருமாக இருந்தவருமான கலைஞர் கருணாநிதி நேற்று (ஆகஸ்ட் 7) காலமானார். இந்திய அரசியலின் மிகப்பெரிய ஆளுமைகளில் ஒருவரான கருணாநிதியின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக இன்று ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டு இருந்தது. பிரதமர் மோடி, தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி  உள்பட தேசியக்கட்சிகளின் தலைவர்கள் கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். 

இதைத்தொடர்ந்து, மாலை 4 மணியளவில் இருந்து  ராஜாஜி அரங்கில் இருந்து, ராணுவ வாகனத்தின் மூலமாக ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்ட கருணாநிதியின் உடல், மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடம் அருகே 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. கருணாநிதியின் உடல் சந்தனப்பேழையில் வைக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. கருணாநிதியின் உடல் வைக்கப்பட்ட சந்தனப்பேழையில், 
‘ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான்’ என்ற வாசகம் ஒரு புறமும், மறுபுறம் கலைஞர். மு.கருணாநிதி- திமுக தலைவர் ஜூன் 03- 1924- ஆகஸ்டு 07- 2018 என எழுதப்பட்டுள்ளது.

ஓய்வுக்கே ஓய்வு கொடுத்தவர் என்று திமுகவினரால் அழைக்கப்பட்டவர் கருணாநிதி. தனது கடுமையான உழைப்பால் திருவாரூர் குக்கிராமத்தில் பின்புலம் இல்லாத குடும்பத்தில் பிறந்து பள்ளிப்படிப்பு மட்டுமே முடித்த கருணாநிதி மாநில  முதல்வராக உயர்ந்ததன் பின்னால் அவரது கடுமையான உழைப்பை யாரும் மறுக்க முடியாது. அதேபோல், அவரது சாதனைகளையும் யாராலும் மறைக்க முடியாது.