தேசிய செய்திகள்

மாநிலங்களவை துணைத் தலைவர் தேர்தல்: பாஜகவிற்கு அ.தி.மு.க ஆதரவு? + "||" + Vice President of the Rajya Sabha: AIADMK support to BJP

மாநிலங்களவை துணைத் தலைவர் தேர்தல்: பாஜகவிற்கு அ.தி.மு.க ஆதரவு?

மாநிலங்களவை துணைத் தலைவர் தேர்தல்: பாஜகவிற்கு அ.தி.மு.க ஆதரவு?
மாநிலங்களவை துணைத் தலைவர் தேர்தலில் பாஜகவிற்கு ஆதரவாக வாக்களிக்க அ.தி.மு.க முடிவுசெய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. #ADMK #BJP
புதுடெல்லி

மாநிலங்களவை துணைத்தலைவர் தேர்தலில் ஆளும் கூட்டணி மற்றும் எதிர்க்கட்சி கூட்டணி வேட்பாளர்களிடையே கடும் போட்டி நிலவுகிறது. 

மாநிலங்களவைத் துணை தலைவராக இருந்த பி.ஜே.குரியனின் பதவிக்காலம் கடந்த ஜூலை 1ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் அந்தப் பதவிக்கு இன்று காலை 11 மணிக்கு தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதில் பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் ஐக்கிய ஜனதா தளத்தின் ஹரிவன்ஷும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் சார்பில் பி.கே. ஹரிபிரசாதும் போட்டியிடுகின்றனர்.

இதையொட்டி தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் எதிர்க்கட்சிகள் தனித்தனியாக தாங்கள் ஆதரவளிக்கும் வேட்பாளர் குறித்து மாநிலங்களவை செயலகத்தில் நோட்டீஸ் அளித்துள்ளன. இவை முறைப்படி இருப்பதாக செயலக வட்டாரங்கள் தெரிவித்தன. எதிர்க்கட்சிகள் தரப்பில் தங்களுடைய வேட்பாளருக்கு காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், திமுக, இடதுசாரிகள், சமாஜ்வாதி கட்சி, பகுஜன் சமாஜ், தேசியவாத காங்கிரஸ் மற்றும் தெலுங்குதேசம் கட்சிகளின் ஆதரவு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. அதே நேரம் தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் போட்டியிடும் ஹரிவன்ஷுகு போதிய ஆதரவு இருப்பதாக நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் விஜய் கோயல் கூறினார்.

ஹரிவன்ஷுக்கு தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள சிவசேனாவும், அகாலிதளமும் ஆதரவு தெரிவித்துள்ளன. இதைத் தவிர கூட்டணியில் இல்லாத அதிமுக, தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி ஆகிய கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. ஆனால் பெரும்பான்மை இல்லாததால்தான் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் உறுப்பினரை வேட்பாளராக பாரதிய ஜனதா அறிவித்திருப்பதாக காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது.

இன்று நடைபெறும் மாநிலங்களவை துணைத் தலைவர் தேர்தலில் பாஜகவிற்கு ஆதரவாக வாக்களிக்க  அதிமுக எம்.பி.க்கள் முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. உத்தரபிரதேசத்தில் பாரதீய ஜனதா முற்றிலும் துடைத்தெறியப்படும் -தேஜஸ்வி யாதவ்
உத்தரபிரதேசத்தில் பாரதீய ஜனதா முற்றிலும் துடைத்தெறியப்படும் என ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சியின் தேஜஸ்வி யாதவ் கூறினார்.
2. எங்களின் இன்றைய அறிவிப்பு மோடிக்கும், அமித்ஷாவுக்கும் தூக்கத்தை கலைக்கும்- மாயாவதி
எங்களின் இன்றைய அறிவிப்பு மோடிக்கும், அமித்ஷாவுக்கும் தூக்கத்தை கலைக்கும் என பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கூறினார்.
3. மக்களவையில் தொடர்ந்து அமளி : மேலும் 7 அதிமுக எம்பிக்கள் சஸ்பெண்ட்
மக்களவையில் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் அதிமுகவை சேர்ந்த மேலும் 7 எம்பிக்களை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் சஸ்பெண்ட் செய்துள்ளார்.
4. வரும் பாராளுமன்ற தேர்தலிலும் ரபேல் ஊழல் முக்கிய பிரச்சினையாக எதிரொலிக்கும் - ப.சிதம்பரம்
வரும் பாராளுமன்ற தேர்தலிலும் ரபேல் ஊழல் முக்கிய பிரச்சினையாக எதிரொலிக்கும் என்று முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கூறி உள்ளார்.
5. முந்தைய தேர்தலை விட அதிக இடங்களில் பாஜக வெற்றி பெறும்: அமித்ஷா
2014-ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலை விட அதிக இடங்களில் வரும் தேர்தலில் பாஜக வெற்றி பெறும் என்று அமித்ஷா தெரிவித்துள்ளார்.