தேசிய செய்திகள்

ஜம்மு காஷ்மீர்: பாரமுல்லா பகுதியில் என்கவுண்டரில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை + "||" + 4 militants killed in Baramulla operation

ஜம்மு காஷ்மீர்: பாரமுல்லா பகுதியில் என்கவுண்டரில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீர்: பாரமுல்லா பகுதியில் என்கவுண்டரில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
ஜம்மு காஷ்மீர் பாரமுல்லா பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற சண்டையில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ஜம்மு காஷ்மீர்,

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள தோனிவாரி என்ற காட்டுப்பகுதியில் பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

இதனையடுத்து அங்கு விரைந்த பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது தோனிவாரி காட்டுப்பகுதியில் மறைந்திருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினர் மீது துப்பாக்கியால் சுட்டனர். இதைத் தொடர்ந்து பாதுகாப்புப் படையினர் பதிலடி கொடுத்தனர். இதில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இந்தநிலையில் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச்சூடு தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், இன்று மேலும் ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. 

இது குறித்து டிஜிபி எஸ்.பி.வைட் கூறுகையில், தோனிவாரி பகுதியில் பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் 5 பேர் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர் என தெரிவித்தார்.