மாநில செய்திகள்

விசா ரத்து செய்யப்பட்டதால் தமிழக மாணவர்கள் ஆஸ்திரேலியாவில் தவிப்பு + "||" + Visa canceled Tamil students Hail in Australia

விசா ரத்து செய்யப்பட்டதால் தமிழக மாணவர்கள் ஆஸ்திரேலியாவில் தவிப்பு

விசா ரத்து செய்யப்பட்டதால் தமிழக மாணவர்கள் ஆஸ்திரேலியாவில் தவிப்பு
விசா ரத்து செய்யப்பட்டுள்ளதால் தமிழகம்,கேரளாவை சேர்ந்த மாணவர்கள் ஆஸ்திரேலியாவில் தவித்து வருகின்றனர்.

கோவை

தமிழ்நாடு, கேரளாவை சேர்ந்த மாணவர்கள் சிலர் ஆஸ்திரேலியாவில் படித்து வருகின்றனர். ஒரு சிலர் அங்குள்ள தனியார் நிறுவனங்களில் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களில் 22 பேர் ஆஸ்திரேலிய அரசிடம் சமர்பித்திருந்த சான்றிதழ்கள் போலியானவை என கூறப்படுகிறது.

இதை கண்டறிந்த ஆஸ்திரேலிய அதிகாரிகள் 22 பேரின் விசாவை ரத்து செய்து அதற்கான நோட்டீசை மாணவர்களிடம் வழங்கி உள்ளனர். இதனால் அவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

விசா ரத்து செய்யப்பட்டுள்ளதால் 22 பேரும் உடனடியாக ஊர் திரும்ப வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இவர்கள் கோவை மாவட்டத்தில் இயங்கி வரும் 3 தனியார் ஏஜென்சிகள் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு சென்றவர்கள் ஆவார்கள்.

மாணவர்கள் தங்களது அசல் சான்றிதழ்களை தனியார் நிறுவனத்திடம் கொடுத்துள்ளனர். ஆனால் அந்த நிறுவனத்தினர் போலியாக தேசிய அங்கீகார வாரியத்தின் சான்றிதழ்களை வழங்கி தங்களை ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பிவிட்டதாக பாதிக்கப்பட்ட மாணவர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

தற்போது ஆஸ்திரேலியாவில் தவித்து வரும் மாணவர்கள் விவசாய மற்றும் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள். இவர்களை அங்குள்ள இந்திய தூதரகம் மூலமாக சொந்த ஊருக்கு அனுப்புவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்கிடையே மாணவர்களுக்கு போலி சான்றிதழ்கள் வழங்கிய ஏஜென்சிகள் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அசல் சான்றிதழ்களை மாணவர்கள் கொடுத்திருந்த நிலையில் அவர்களுக்கு போலி சான்றிதழ்கள் வழங்கியது ஏன்? எவ்வாறு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன? அதில் நடந்த முறைகேடுகள் என்னென்ன? இதில் சம்பந்தப்பட்டவர்கள் யார்-யார்? என விசாரணை நடைபெற்று வருகிறது.


தொடர்புடைய செய்திகள்

1. 2017-18-ஆம் நிதியாண்டில் அதிக கல்வி கடன்களை பெற்றுள்ள தமிழக மாணவர்கள்
2017-18-ஆம் நிதியாண்டில் தமிழக மாணவர்கள் அதிக கல்வி கடன்களை பெற்றுள்ளனர்.
2. திருவனந்தபுரம், எர்ணாகுளத்தில் ‘நீட்’ தேர்வு எழுத சென்ற தமிழக மாணவர்கள் தங்குவதற்கு ஏற்பாடு
திருவனந்தபுரம், எர்ணாகுளத்துக்கு ‘நீட்’ தேர்வு எழுத சென்றுள்ள தமிழக மாணவர்கள் தங்குவதற்கு கேரள அரசும், தமிழ்ச் சங்கமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ளன.
3. நீட் தேர்வு எழுத வரும் தமிழக மாணவர்களுக்கு உதவிகள் செய்ய கேரள முதல்வர் பினராய் விஜயன் உத்தரவு
நீட் தேர்வு எழுத வரும் தமிழக மாணவர்களுக்கு உதவிகள் செய்ய கேரள முதல்வர் பினராய் விஜயன் உத்தரவிட்டு உள்ளார். #HelpNEETStudents #PinarayiVijayan
4. நீட் தேர்வு எழுத வெளிமாநிலம் செல்லும் தமிழக மாணவர்களுக்கு உரிய உதவிகளை செய்ய வேண்டும்: ஸ்டாலின் கோரிக்கை
நீட் தேர்வு எழுத வெளிமாநிலம் செல்லும் தமிழக மாணவர்களுக்கு உரிய உதவிகளை செய்ய வேண்டும் என்று ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். #MKstalin #NEET
5. ‘நீட்’ தேர்வு மையங்களில் மாற்றம் இல்லை சுப்ரீம் கோர்ட்டு அறிவிப்பு
தமிழக மாணவர்கள் ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ள வெளி மாநில மையங்களில் தான் ‘நீட்’ தேர்வு எழுத வேண்டும் என்றும், தேர்வுக்கு குறைந்த காலமே உள்ளதால் புதிய தேர்வு மையங்களை அமைக்க உத்தரவிட முடியாது என்றும் நேற்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது. #NEET