தேசிய செய்திகள்

மாநிலங்களவை துணைத் தலைவராக பாரதீய ஜனதா வேட்பாளர் ஹரிவன்ஷ் வெற்றி + "||" + NDA candidate Harivansh Narayan Singh elected as Rajya Sabha Deputy Chairman

மாநிலங்களவை துணைத் தலைவராக பாரதீய ஜனதா வேட்பாளர் ஹரிவன்ஷ் வெற்றி

மாநிலங்களவை துணைத் தலைவராக பாரதீய ஜனதா  வேட்பாளர் ஹரிவன்ஷ் வெற்றி
மாநிலங்களவை துணைத் தலைவராக தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் ஹரிவன்ஷ் வெற்றி பெற்று உள்ளார். #HarivanshNarayanSingh #BJP
புதுடெல்லி

மாநிலங்களவை துணைத்தலைவர் தேர்தலில் ஆளும் கூட்டணி மற்றும் எதிர்க்கட்சி கூட்டணி வேட்பாளர்களிடையே கடும் போட்டி நிலவுகிறது. 

மாநிலங்களவைத் துணை தலைவராக இருந்த பி.ஜே.குரியனின் பதவிக்காலம் கடந்த ஜூலை 1ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் அந்தப் பதவிக்கு இன்று காலை 11 மணிக்கு தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதில் பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் ஐக்கிய ஜனதா தளத்தின் ஹரிவன்ஷும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் சார்பில் பி.கே. ஹரிபிரசாதும் போட்டியிடுகின்றனர்.

இதையொட்டி தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் எதிர்க்கட்சிகள் தனித்தனியாக தாங்கள் ஆதரவளிக்கும் வேட்பாளர் குறித்து மாநிலங்களவை செயலகத்தில் நோட்டீஸ் அளித்துள்ளன. இவை முறைப்படி இருப்பதாக செயலக வட்டாரங்கள் தெரிவித்தன. எதிர்க்கட்சிகள் தரப்பில் தங்களுடைய வேட்பாளருக்கு காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், திமுக, இடதுசாரிகள், சமாஜ்வாதி கட்சி, பகுஜன் சமாஜ், தேசியவாத காங்கிரஸ் மற்றும் தெலுங்குதேசம் கட்சிகளின் ஆதரவு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. 

ஹரிவன்ஷுக்கு தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள சிவசேனாவும், அகாலிதளமும் ஆதரவு தெரிவித்துள்ளன. இதைத் தவிர கூட்டணியில் இல்லாத அதிமுக, தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி ஆகிய கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. 

மாநிலங்களவை துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் தொடங்கியது; மாநிலங்களவையில் மொத்தமுள்ள 245 இடங்களில் ஒரு இடம் காலியாக உள்ளதால் 244 இடங்கள் உள்ளன 

மாநிலங்களவை துணைத் தலைவராக தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் ஹரிவன்ஷ்  வெற்றி பெற்று உள்ளார்.  125 ஓட்டுகளில்  வெற்றி பெற்று உள்ளார்.எதிர்க்கட்சி வேட்பாளர் பி.கே. ஹரிபிரசாத் எதிர்பார்த்ததைவிட குறைவாகவே ஓட்டு கிடைத்தது. அவர் 105 ஓட்டுகள் பெற்று இருந்தார்.