தேசிய செய்திகள்

ஸ்டெர்லைட் விவகாரம்: தமிழக அரசின் கோரிக்கை நிராகரிப்பு + "||" + Sterile affair: Rejection of demands of the Government of Tamil Nadu

ஸ்டெர்லைட் விவகாரம்: தமிழக அரசின் கோரிக்கை நிராகரிப்பு

ஸ்டெர்லைட் விவகாரம்: தமிழக அரசின் கோரிக்கை நிராகரிப்பு
ஸ்டெர்லைட் விவகாரத்தில் வேதாந்தா நிறுவனத்தின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. #Sterile
புதுடெல்லி, 

தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த மே மாதம் நடந்த போராட்டம் கலவரத்தில் முடிந்தது. அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிர் இழந்தனர். இதைத்தொடர்ந்து, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு மே 28-ந் தேதி உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து, அந்த ஆலைக்கு அதிகாரிகள் ‘சீல்‘ வைத்தனர்.

இந்த நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து ஸ்டெர்லைட் நிர்வாகம் டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளது. இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவில், இறுதி தீர்ப்பு கூறப்படும் வரை, ஆலையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள இடைக்காலமாக அனுமதிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டு இருக்கிறது.

இந்த  மனு மீதான விசாரணையின் போது ஸ்டெர்லைட் விவகாரத்தில் வேதாந்தா நிறுவனத்தின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் உத்தரவை எதிர்த்து வழக்கு தொடரலாம் என  தேசிய பசுமை தீர்ப்பாயம் கூறி உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் செயல்பட தமிழக அரசின் அனுமதியை கேட்போம் - தலைமை செயல் அதிகாரி பேட்டி
ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் செயல்பட தமிழக அரசின் அனுமதியை கேட்போம் என ஸ்டெர்லைட் ஆலை தலைமை செயல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
2. மின் இணைப்பு வழங்க வேண்டும் : ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதி - தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு
ஸ்டெர்லைட் ஆலையை மூடுமாறு தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை நேற்று அதிரடியாக ரத்து செய்த தேசிய பசுமை தீர்ப்பாயம், ஆலையை மீண்டும் திறக்க அனுமதி வழங்கி தீர்ப்பு கூறியது.
3. ஸ்டெர்லைட் ஆலை இயங்காமல் இருக்க தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் -சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன் தகவல்
ஸ்டெர்லைட் ஆலை இயங்காமல் இருக்க தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என்று சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன் தெரிவித்துள்ளார்.
4. ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.
5. ஸ்டெர்லைட் ஆலையை மூடியதற்கு எதிரான வழக்கு: தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் அடுத்த வாரம் தீர்ப்பு
ஸ்டெர்லைட் ஆலையை மூடியதற்கு எதிரான வழக்கில் தேசிய பசுமை தீர்ப்பாயம் அடுத்த வாரம் தீர்ப்பு வழங்குகிறது.