தேசிய செய்திகள்

மேற்கு வங்காள பாரதீய ஜனதா கட்சி தலைவரது கார் மீது மர்ம நபர்கள் தாக்குதல் + "||" + Bengal BJP chief Dilip Ghosh's car attacked

மேற்கு வங்காள பாரதீய ஜனதா கட்சி தலைவரது கார் மீது மர்ம நபர்கள் தாக்குதல்

மேற்கு வங்காள பாரதீய ஜனதா கட்சி தலைவரது கார் மீது மர்ம நபர்கள் தாக்குதல்
மேற்கு வங்காள பாரதீய ஜனதா கட்சியின் தலைவரது கார் மீது மர்ம நபர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

கொல்கத்தா,

மேற்கு வங்காளத்தில் பாரதீய ஜனதா கட்சியின் தலைவராக இருப்பவர் திலீப் கோஷ்.  எம்.எல்.ஏ.வான இவர் கட்சி தொண்டர் ஒருவரது இல்லத்தில் நேற்று நடந்த இரவு விருந்தில் கலந்து கொண்டு தனது காரில் ஓட்டலுக்கு திரும்பி கொண்டு இருந்துள்ளார்.

அவரது கார் மீது அடையாளம் தெரியாத நபர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தி உள்ளனர்.  அவர்கள் பாரதீய ஜனதா கட்சியை பற்றி அவதூறாக பேசி உள்ளனர்.

இதுபற்றி கோஷ் போலீசில் புகார் தெரிவித்து உள்ளார்.  ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினருடன் தொடர்புடைய மர்ம நபர்கள் இந்த தாக்குதலில் ஈடுபட்டு உள்ளனர் என்று பாரதீய ஜனதா கட்சி தெரிவித்துள்ளது.

ஆனால் இதனை அடிப்படையற்ற குற்றச்சாட்டு என்று கூறி பங்குரா மாவட்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர்  மறுத்துள்ளார்.  இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.தொடர்புடைய செய்திகள்

1. பாகிஸ்தான் பள்ளி கூடத்தில் மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு; 4 குழந்தைகள் காயம்
பாகிஸ்தானில் பள்ளி கூடம் ஒன்றில் மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டதில் 4 குழந்தைகள் காயமடைந்தனர்.
2. செய்யூர் அருகே கார்-லாரி மோதல்; தந்தை, மகள் பலி டிரைவர் கைது
செய்யூர் அருகே காரும் லாரியும், நேருக்கு நேர் மோதிய விபத்தில் புதுச்சேரியை சேர்ந்த தந்தை, மகள் பரிதாபமாக இறந்தனர். இது தொடர்பாக லாரி டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
3. காரில் கடத்திய ரூ.10 லட்சம் செம்மரக்கட்டைகள் பறிமுதல் - திருவண்ணாமலையை சேர்ந்தவர் உள்பட 4 பேர் கைது
பெங்களூருவில், காரில் கடத்தப்பட்ட ரூ.10 லட்சம் செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக தமிழகத்தை சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
4. பெருமாள் கோவிலுக்குள் சுவர் ஏறி குதித்து வந்த மர்ம நபர்கள் - போலீசார் விசாரணை
கொரடாச்சேரி அருகே பெருமாள் கோவிலுக்குள் சுவர் ஏறி குதித்து வந்த மர்மநபர்கள், ஐம்பொன் சாமிசிலையை திருட வந்தார்களா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
5. மயிலாடுதுறையில் கார்-நகைகளுடன் மாயமான வாலிபர் கைது
மயிலாடுதுறையில் கார் மற்றும் நகைகளுடன் மாயமான வாலிபர் வாகனசோதனையில் சிக்கினார். அவரை போலீசார் கைது செய்தனர்.