தேசிய செய்திகள்

26 ஆண்டுகளுக்கு பிறகு இடுக்கி அணையில் இன்று நீர் திறப்பு - கரையோர மக்களுக்கு எச்சரிக்கை + "||" + Idukki dam 26 years after the opening of the water today - to alert coastal populations

26 ஆண்டுகளுக்கு பிறகு இடுக்கி அணையில் இன்று நீர் திறப்பு - கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

26 ஆண்டுகளுக்கு பிறகு இடுக்கி அணையில் இன்று நீர் திறப்பு - கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
இடுக்கி அணையின் நீர் மட்டம் முழு கொள்ளளவை எட்டியதால் 26 ஆண்டுகளுக்கு பிறகு இன்று நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. #Idukkidam
இடுக்கி

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள இடுக்கி அணை கடல் மட்டத்தில் இருந்து 2,403 அடி உயரத்தில் அமைந்துள்ளது. 

இடுக்கி அணை குறவன் மலை மற்றும் குறத்தி மலை ஆகிய இரு அணைகளையும் இணைத்து ஒரு அரைவட்டம் போன்று பெரியாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. 

ஆசியாவிலேயே கட்டப்பட்ட வளைவு அணைகளில் இடுக்கி அணை மிகப்பெரியதாகும். உயரமான அணையாகும். கடந்த 1969-ம் ஆண்டு அணைக் கட்டும் பணி தொடங்கப்பட்டு 1973-ம் ஆண்டு பயன்பாட்டுக்கு இடுக்கி அணை வந்தது. கடந்த 1992 ம் ஆண்டு இடுக்கி அணையில் இருந்து தண்ணீர் செருதோனி அணை வழியாக திறக்கப்பட்டது. அதன்பின் கடந்த 26 ஆண்டுகளாக இடுக்கி அணை நிரம்பும் அளவுக்கு மழை பெய்யவில்லை. தற்போது கேரளாவில் பலத்த மழை பெய்து வருவதால் இந்த அணையின் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. இந்நிலையில், இப்போது அணை தனது முழுக்கொள்ளவை எட்டியதால் திறக்கப்பட்டு உள்ளது.

இன்று காலை இந்த அணையின் நீர்மட்டம் 2398.98 அடியை எட்டியது. இதையடுத்து அணையின் மதகுகள் இன்று மதியம் திறக்கப்பட்டது. முதற்கட்டமாக அணையில் இருந்து வினாடிக்கு 50 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது.

1981-ம் ஆண்டும், 1992-ம் ஆண்டும் இருமுறை மட்டுமே இடுக்கி அணை தனது முழுக்கொள்ளளவை எட்டியதால், திறக்கப்பட்டுள்ளது.

அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்படுவதை அடுத்து அணை பகுதியில் வசிக்கும் கரையோர மக்களுக்கு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. தண்ணீர் வரும் பாதையில் செல்பி எடுக்கவோ, மீன் பிடிக்கவோ யாரும் முயற்சிக்க வேண்டாம் என்று அதிகாரிகள் எச்சரித்து உள்ளனர்.