தேசிய செய்திகள்

ஹரிவன்ஸ் நாராயண் சிங் வெற்றி குறித்து சோனியாகாந்தி கருத்து + "||" + Sometimes we win and sometimes we lose: Sonia Gandhi on NDA Candidate Harivansh elected as Rajya Sabha Deputy Chairman

ஹரிவன்ஸ் நாராயண் சிங் வெற்றி குறித்து சோனியாகாந்தி கருத்து

ஹரிவன்ஸ் நாராயண் சிங் வெற்றி குறித்து சோனியாகாந்தி கருத்து
மாநிலங்களவை துணைத் தலைவராக பாஜக கூட்டணி கட்சியின் ஹரிவன்ஷ் வெற்றி குறித்து சோனியா கருத்து தெரிவித்துள்ளார். #SoniaGandhi
புதுடெல்லி,

மாநிலங்களவைத் துணை தலைவராக இருந்த பி.ஜே.குரியனின் பதவிக்காலம் கடந்த ஜூலை 1-ம் தேதியுடன் முடிவடைந்தது.  இதனையடுத்து புதிய மாநிலங்களவை துணை தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான ஓட்டெடுப்பு இன்று நடைபெற்றது. 
 
இதில் பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த ஹரிவன்ஸ் நாராயண் சிங் போட்டியிட்டார். 

எதிர்க்கட்சிகளின் சார்பில் பி.கே. ஹரிபிரசாத் களம் கண்டார். இதில் ஹரிவன்ஸ் நாராயண் சிங்  125 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். பி.கே. ஹரி பிரசாத்துக்கு 105 ஓட்டுகள் மட்டுமே கிடைத்தது. வெற்றி பெற்ற ஹரிவன்ஸ் நாராயண் சிங்கிற்கு பிரதமர் நநேந்திர மோடி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர். 

இந்தநிலையில், மாநிலங்களவை துணைத் தலைவராக பாஜக கூட்டணி கட்சியின் ஹரிவன்ஷ் வெற்றி குறித்து சோனியா கருத்து தெரிவித்துள்ளார் அதில், நாம் சில நேரங்களில் வெற்றியும் பெற்றுள்ளோம், சில நேரங்களில் தோல்வியும் அடைந்துள்ளோம்  எனக்கூறினார்.