தேசிய செய்திகள்

உபரி நீரை தமிழகத்துக்கு ஜூலை மாதம் தர வேண்டிய நீருடன் கணக்கிட்ட கர்நாடகம் + "||" + Karnataka has said that supplementary water should be given to Tamil Nadu in July

உபரி நீரை தமிழகத்துக்கு ஜூலை மாதம் தர வேண்டிய நீருடன் கணக்கிட்ட கர்நாடகம்

உபரி நீரை தமிழகத்துக்கு ஜூலை மாதம் தர வேண்டிய நீருடன் கணக்கிட்ட கர்நாடகம்
கனமழை காரணமாக, தமிழகத்துக்கு ஜூலை மாதம் தர வேண்டிய 58 டிஎம்சிக்கு 140 டிஎம்சி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதாக கர்நாடகா தகவல்
புதுடெல்லி

புதுடெல்லியில் இன்று நடை பெற்ற  காவிரி ஒழுங்காற்றுக் குழு கூட்டத்தில் பங்கேற்ற கர்நாடக மாநில அரசு அதிகாரிகள், காவிரி ஆணையம் உத்தரவிட்டதை விட கடந்த மாதம் அதிகப்படியான தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதாக கூறி உள்ளனர்.

காவிரி ஒழுங்காற்றுக்குழுவின் 2 வது  கூட்டம் இன்று   ஒழுங்காற்றுக் குழுத்தலைவர் நவீன்குமார் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கர்நாடக அரசு சார்பில் கலந்துகொண்ட அதிகாரிகள், காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவுபடி ஜூலை மாதம் தமிழகத்திற்கு 58 டிஎம்சி தண்ணீர் தர வேண்டும். ஆனால், தாங்கள் 140 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட்டுள்ளதாக கூறி உள்ளனர்.

இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அணை நிரம்பியதில் வேறு வழியின்றி வெளி யேற்றிய நீரையும், கணக்கில் கொண்டு 140 டிஎம்சி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதாக கூறி உள்ளனர்.  கர்நாடக அரசு அதிகாரிகளின் இந்த கணக்குக்கு தமிழக அதிகாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.


தொடர்புடைய செய்திகள்

1. கர்நாடகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் கூட்டணி ஆட்சியை கவிழ்க்க பா.ஜனதா திட்டம்
கர்நாடகத்தில், நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக கூட்டணி ஆட்சியை கவிழ்க்க பா.ஜனதா திட்டமிட்டுள்ளது. இதற்காக ஆபரேஷன் தாமரை மூலம் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளின் எம்.எல்.ஏ.க்களை இழுக்கவும் அக்கட்சி வியூகம் வகுத்துள்ளது.
2. மணப்பாறை அருகே காவிரி குடிநீர் குழாயில் உடைப்பு
மணப்பாறை அருகே காவிரி குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. வீணாக வெளியேறிய தண்ணீரில் இளைஞர்கள் ஆனந்த குளியல் போட்டு மகிழ்ந்தனர்.
3. கடலில் கலக்கும் ஆற்றுநீர் வீணாகிறதா?
காவிரியாக இருந்தாலும் சரி, தாமிரபரணியாக இருந்தாலும் சரி ஆண்டுதோறும் நமக்கு தேவையான நீரை தருவதில்லை. சில ஆண்டுகளுக்கு ஒரு முறையே போதுமான நீரை கொண்டு வருகிறது.
4. கர்நாடகத்தில் இன்று பஸ்-ஆட்டோக்கள் ஓடாது : பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து இன்று (திங்கட்கிழமை) நாடுதழுவிய முழு அடைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
5. காவிரியில் நீர்வரத்து குறைந்ததால் வெள்ளம் வடிந்தது - இயல்பு வாழ்க்கை திரும்புகிறது
ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியில் காவிரியில் நீர்வரத்து குறைந்ததால் வெள்ளம் வடிந்து இயல்பு வாழ்க்கை திரும்புகிறது.