தேசிய செய்திகள்

முத்தலாக் மசோதாவில் திருத்தம் : மத்திய அமைச்சரவை ஒப்புதல் + "||" + Cabinet approves amendment in Triple Talaq Bill

முத்தலாக் மசோதாவில் திருத்தம் : மத்திய அமைச்சரவை ஒப்புதல்

முத்தலாக் மசோதாவில் திருத்தம் : மத்திய அமைச்சரவை ஒப்புதல்
முத்தலாக் மசோதாவில் திருத்தம் மேற்கொள்ள மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
புதுடெல்லி,

இஸ்லாமிய மதத்தை சேர்ந்த ஆண் ஒருவர் தனது மனைவியை மூன்று முறை தலாக் கூறி விவாகரத்து செய்யும் நடைமுறைக்கு சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை விதித்ததோடு, இதுபற்றி சட்டம் இயற்றுமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

இதைத்தொடர்ந்து, முத்தலாக் தடைக்கு சட்டம் இயற்றும் பொருட்டு, ‘முஸ்லிம் பெண்கள் திருமண பாதுகாப்பு உரிமை மசோதா’ பாராளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேறியது. இந்த மசோதா டெல்லி மேல்-சபையில் நிலுவையில் உள்ளது. 

இந்தநிலையில்,  முத்தலாக் மசோதாவில் திருத்தம் மேற்கொள்ள மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு முன்னர் முத்தலாக் கூறி விவாகரத்து செய்தால் ஜாமீனில் வெளிவரமுடியாத நிலை இருந்தது.  ஆனால் தற்போது,  ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவில் கைதானாலும் நீதிமன்றம் ஜாமீன் தரும் வகையில் சட்டத்திருத்தம் செய்யப்பட்டுள்ளது.