தேசிய செய்திகள்

ஆதார் எண்ணை வெளியிட்டு சங்கடத்துக்குள்ளான டிராய் சேர்மன் ஆர்.எஸ் சர்மாவின் பதவிக்காலம் நீட்டிப்பு + "||" + Telecom Watchdog Chief Who Threw Aadhaar Challenge Gets An Extension

ஆதார் எண்ணை வெளியிட்டு சங்கடத்துக்குள்ளான டிராய் சேர்மன் ஆர்.எஸ் சர்மாவின் பதவிக்காலம் நீட்டிப்பு

ஆதார் எண்ணை வெளியிட்டு சங்கடத்துக்குள்ளான டிராய் சேர்மன் ஆர்.எஸ் சர்மாவின் பதவிக்காலம் நீட்டிப்பு
டிராய் சேர்மன் ஆர்.எஸ் சர்மாவின் பதவிக்காலம் மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணைய (டிராய்) தலைவரும் ஆதார் ஆணைய முன்னாள் தலைவருமான ராம் சேவக் சர்மா தனது ஆதார் எண்ணை டுவிட்டரில் வெளியிட்டு, இதன் மூலம் எனக்கு பாதிப்பை ஏற்படுத்த முடியுமா என்று அண்மையில் சவால் விடுத்தார். இதையடுத்து, சர்மாவின் புகைப்படம், பிறந்த தேதி, வீட்டு முகவரி, செல்போன் எண், பான் எண் உள்ளிட்ட விவரங்களை சிலர் வெளியிட்டனர். 

ஆனால், இந்தத் தகவல் எல்லாம் பொது வெளியில் இருந்து கூகுள் தேடுபொறி மூலம் திரட்டப்பட்டதாகவும், ஆதார் தகவல் தொகுப்பிலிருந்து சேகரிக் கப்படவில்லை என்றும் சர்மா தெரிவித்திருந்தார்.அத்துடன் இதன்மூலம் எனக்கு எந்த வகையில் பாதிப்பை ஏற்படுத்த முடியும் என்றுதான் நான் சவால் விடுத்தேன் என்றும் கூறியிருந்தார்.  ஆதார் எண்ணை வெளியிட்டது  சமூக வலைதளங்களில் கலவையான விமர்சனங்களையும் ஏற்படுத்தியது. 

டிராய் சேர்மன் ஆர். எஸ் சர்மாவின் பதவிக்காலம், இந்த வாரத்துடன் முடிவடைய உள்ள நிலையில்,  மேலும், 2 ஆண்டுகளுக்கு அவரது பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.  தற்போது 63 வயதாகும் ஆர்.எஸ் சர்மா தனது 65 -வது வரை அதாவது செப்டம்பர் 2020 அப்பொறுப்பில் நீடிப்பார் என்று அரசு பிறப்பித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


தொடர்புடைய செய்திகள்

1. 50 கோடி மொபைல் இணைப்புகள் துண்டிக்கப்படும் அபாயம் -ஆதார் ஆணையம் மறுப்பு
ஆதார் அடிப்படையில் தனிப்பட்ட விவரங்கள் பெறப்பட்ட 50 கோடி மொபைல் இணைப்புகள் துண்டிக்கப்படும் அபாயம் குறித்து ஆதார் ஆணையம் மறுப்பு தெரிவித்து உள்ளது.
2. பள்ளிகள், நுழைவு தேர்வுகளுக்கு ஆதார் கட்டாயம் இல்லை சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு மு.க.ஸ்டாலின் வரவேற்பு
பள்ளிகள், நுழைவு தேர்வுகளுக்கு ஆதார் கட்டாயம் இல்லை என்ற சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
3. ஆதார் எண் எதற்கு கட்டாயம்! எதற்கு தேவை இல்லை? சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு விவரம்
ஆதார் எண் எதற்கு கட்டாயம்! எதற்கு தேவை இல்லை? சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு விவரம் வெளியாகி உள்ளது
4. ஆதார் எண் வழக்கில் தனியார் நிறுவனங்கள் ஆதார் தகவல்களை கோருவது சட்டவிரோதம் - சுப்ரீம் கோர்ட்டு
ஆதார் எண் வழக்கில் தனியார் நிறுவனங்கள் ஆதார் தகவல்களை கோருவது சட்டவிரோதம் என சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்து உள்ளது. #Aadhaar,
5. ஆதார் எண் கட்டாயமா? இல்லையா? என்ற வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு இன்று தீர்ப்பு
ஆதார் எண் கட்டாயமா? இல்லையா? என்ற வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு இன்று (புதன்கிழமை) தீர்ப்பு வழங்குகிறது.